13 April 2015

மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது. கோர்ட் எண் 2 இல் வழக்கு எண் 45 ஆவதாக இடம் பெற்றது
மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.
Court No:2
Hearing No:45

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

லாவண்யா உள்ளிட்ட சிலர் , ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், தகுதியானவர்கள், தகுதியிழப்பு செய்யப்படுகின்றனர். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹீம் கலிஃபுல்லா தலைமையில் நடந்தது.வழக்கின் இறுதி விசாரணை, ஏப்ரல் 21-ம் தேதி நடக்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தற்போது தமிழகத்தில்10,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு முன்பாக உச்சநீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்
மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமை தாங்கினார். 18 ஆசிரியர் சங்க உயர் மட்டக்குழு உறுப்பினர் கே.தயாளன், அ.சக்ரபாணி கிப்சன்முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் கூறியதாவது:–மத்திய அரசில் பணியாற்றும்... மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஜி.பி.எப்.) தொடர்ந்திட வேண்டும்.தமிழ்மொழி வழிக்கல்வி, சமச்சீர் கல்வி, அருகமைப்பள்ளிகள்–பொதுப்பள்ளிகள் திட்டம், குழந்தை நேயக்கல்வி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டுக்கு என தனிக்கல்வி கொள்கையினை அரசு அறிவித்திட வேண்டும்.

அரசாணை 132–ஐ ரத்து செய்து விவசாயம், நெசவு, மரவேலை பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கடுத்தாவது தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி தலைவர்கள் ஆதரவுஇந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த நிர்வாகி கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.இதேபோல், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் மு.துரைபாண்டியன், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரும் வந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...