TET Weightage முறைக்கு எதிராக 14ஆம் நாள் போராட்டம்! (05.09.2014 Status)
டெட் வெயிட்டேஜ்முறைக்குஎதிராகஇன்று14ஆம்நாள்போராட்டம்நடைபெற்றது.இதில்1000க்கும்மேற்பட்டதேர்வர்கள்கலந்துகொண்டனர்.போராட்டத்தில்கலந்துகொண்டவர்கள்தமிழகதேர்தல்ஆணையஅலுவலகத்திற்குஎதிராககூடிகோஷமிட்டனர்.பிறகுதமிழகதேர்தல்ஆணையஅலுவலகத்திற்குள்சென்று,அங்கு இருந்த அதிகாரிகளிடம் ”வெயிட்டேஜ் முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு” தெரிவிக்கும் பொருட்டு தங்கள் தேர்தல் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.
தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ”வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் வழங்கியது என்பதால் அங்கு சென்று தான் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து டெட் தேர்வர்கள் பேரணியாக இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்ல துவங்கினர். அப்போது காவல்துறை பேரணி செல்ல முறையாக அனுமதி பெறப்படாததால் தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்வர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டும், தங்கள் கண்களை கருப்பு துணியால் கட்டியவாறும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் போராடுபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் லேசான தடியடி நடைபெற்றது. இதில் தேர்வர்கள் அணிந்து வந்த துணிகள் கிழிந்து காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வர்கள் திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. மணி அவர்கள் திருமண மண்டபத்தில் தேர்வர்களை சந்தித்து ”தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” என கூறி ஆறுதல் வழங்கினார். தற்போது 7 மணி அளவில் தேர்வர்கள் விடுவிக்கப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளில் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். நாளை மீண்டும் 15ஆம் நாள் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
5 September 2014
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்றுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் ‘அப்பீல்’ செய்துள்ளது. பணி நியமனத்துக்கு தடை இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது’ என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
‘அப்பீல்’ இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நேற்று நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல் செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை ‘அப்பீல்’ மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.இதனால், தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: டி.ஆர்.பி.,
'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணைவெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
புதிய ஆசிரியர் நியமன விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியரை பணி நியமனம் செய்ய, நீதிமன்றம், இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு, நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
இந்த பிரச்னையில், அடுத்ததாக என்ன நடக்கும் எனத் தெரியாமல், தேர்வு பெற்ற ஆசிரியரும், தேர்வு பெறாத ஆசிரியரும், திகிலில் உள்ளனர். ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டபோது 'தற்போதைய தேர்வுப் பட்டியல், தற்காலிகமானது; வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு, தேர்வுப் பட்டியல் உட்பட்டது' என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
இதனால், ஏதாவது மாற்றம் வரலாம் எனவும், தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், 'கடைசியாக வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தான், ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்டோம். இனி, மேலும் ஒரு புதிய அரசாணை வந்தால், அதற்கேற்பவும், பட்டியலை தயாரித்து வெளியிட, தயாராக உள்ளோம்' என, தெரிவித்தது.

Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...