26 May 2015

ஆய்வக உதவியாளர் போட்டித் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளி ஆய்வக உதவியாளர் போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்த நுழைவுச் சீட்டுகளை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பிறந்த தேதி, விண்ணப்பத்திலுள்ள பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர் தேர்வு:அனுமதி சீட்டு (Hall Ticket) வெளியீடு. ஆய்வக உதவியாளர் தேர்வு: இன்று முதல்(25.05.2015) அனுமதி சீட்டு தரவிறக்கம் செய்யலாம்!!!

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...