20 September 2014

வரும் செவ்வாய் அன்று டெல்லி தீர்ப்பு.... 

கடந்த கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. 


அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது. இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார். 

மேலும் மூன்று மாதம் கடந்த பிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு வந்த தமிழகஅரசு இம்முறை வாய்தா வாங்க வழி இல்லாமல் முழித்துகொண்டுள்ளது. ஏனென்றால் வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி  முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது.

 ஏற்கெனவே  அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அரசுக்கு எதிராக தான் அமையும். தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள். யாருக்கு காலி பணியிடம் இடியாப்ப சிக்கலில் ஆசிரியர்கள். அடுத்து என்ன நடக்கும் ,........... நாளை தொடரும்.
Thanks to www.tnteachersnews.blogspot.com
TET வழக்கில் தீர்ப்பு எப்போது? 

டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்க வலுவான ஆதாரங்களை இணைத்து தங்கள் வாதக்கருத்துகளை முழுமையாக நேற்று தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் அடிப்படையில் வரும் திங்கள் (22.9.14) அன்று தீர்ப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு அரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக நடந்து முடிந்த பணி நியமன கலந்தாய்வின் அடிப்டையில் பணி நியமனம் நடைபெறும். ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் உடனடியாக ”தீர்ப்பு-மீள் ஆய்வு” கோரி மனு செய்யப்பட வாய்ப்பு உண்டு. 

வெயிட்டேஜ் குறித்த வழக்கில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம் ஏதேனும் ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தினால், அத்தீர்ப்பின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். ”வழக்கின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும்?” என அறிந்து கொள்வதற்காக கலந்தாய்வில் பங்கேற்ற தேர்வர்களும், பட்டியலில் இடம்பெறாத தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் என இரு தரப்புமே மிக ஆவலாக உள்ளனர். பொது மக்களும், கல்வியாளர்களும் மாணவர்களின் கல்வி நலனை காக்க உடனடியாக பணி நியமனம் நடைபெற வேண்டும் என கருதுகின்றனர்.
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை

ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யஇன்னும் 6 நாள்களே கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப் பட்டன. 

இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். 

இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய வில்லை. இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐந்து பாடங்களுக்கான உதவி பேராசிரியர் பணி இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு!! சென்னை :ஐந்து பாடங்களில், உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உள்ள, 1,096 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தியது. பல நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இயற்பியல் உட்பட, ஐந்து பாடங்களின் இறுதி மதிப்பெண் பட்டியல் நேற்று இரவு, ஆசிரியர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளிடப்பட்டது. மற்ற பாடங்களுக்கான இறுதி மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு.. உடனடியாக ஒத்தி வைக்க தமிழக அரசிடம் சீமான் வலியுறுத்தல்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்ட...