Posts

Showing posts from July 29, 2022
Image
  வேளாண் இளங்கலை படிப்பு விண்ணப்பிக்க அவகாசம் கோவை:மாணவர்களின் வசதிக்காக பி.எஸ்சி., வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை, ஆகஸ்ட் 10 வரை வேளாண் பல்கலை நீட்டித்துள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்புக் கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பி.எஸ்சி., வேளாண் படிப்பின் கீழ், 12 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில், 4,485 இடங்கள் உள்ளன. 2022 - 23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை பல்கலை நிர்வாகம் துவக்கியது. மாணவர்கள், http://tnau.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர். நேற்று முன்தினம் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, வேளாண் பல்கலை அறிவுறுத்தியிருந்தது.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மாணவர்களின் வசதிக்காக, ஆகஸ்ட் 10 வரை அத்தேதியை நீட்டித்து வேளாண் பல்கலை உத்தரவிட்டுள்ளது.இதுவரை, 34 ஆயிரத்து 564 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Image
  1089 காலிப்பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1, குரூப் 2 , 2A, குரூப் 4 , விஏஓ என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகள், தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி தற்போது நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விருப்பதும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர் : நில அளவர், வரைவாளர் , அளவர்/ உதவி வரைவாளர். மொத்த காலியிடங்கள்: 1089 நில அளவர் - 794 +4 வரைவாளர் - 236 அளவர்/ உதவி வரைவாளர். - 55 சம்பளம் - மாதம் ரூ.19500-71900/ அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் - 29.07.2022 விண்ணப்பிக்க கடைசி நாள் - 24.08.2022 தேர்வு நடைபெறும் நாள் - 06.11.2022 தேர்வு முறை - கணினி வழித் தேர்வு ( Online Exam) கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள்
Image
மாணவர்கள், சிறுவர்கள் உளவியல் நெருக்கடி: தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யவேண்டும்? தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி காலை அப்பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் திருவள்ளூர், கடலூர், சிவகாசி, விழுப்புரம், சிவகங்கை‌, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 6 மாணவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் சில மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியாததால் காவல் துறை சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. ஆசிரியர்கள் பணி எதுவரை? இதனிடையே சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் தொடர் தற்கொலை நிகழ்வு மன வேதனை அளிப்பதாக கூறினார். "கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் அதனைத் தொழிலாக நினைக்காமல் தொண்டாக கருத வே
Image
  முழுப் பாடத் திட்டத்தை சுமத்துதல், கூடுதல் வகுப்புகள் கூடாது: மாணவர்களின் மன அழுத்தம் போக்க ராமதாஸ் யோசனை மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க, முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்; கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது' என்று பள்ளிக் கல்வித் துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மர்மச்சாவு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் சங்கிலித் தொடராக மாறிவிடாமல் தடுக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும். சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி கடந்த 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், கொலை செய்யப்பட்டதாக பெற்றோரும் கூறி வரும் நிலையில் உண்மை என்ன என்பதை விசாரணை தான் வெளி
Image
 "விடுமுறை நாட்களில் வகுப்புகள் கூடாது" - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!! விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்றும் தெரிவித்தது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக
Image
  நவோதயா வித்யாலயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் காலிப்பணியிடங்கள் : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி PGT, TGT, Principal, Music Teacher மற்றும் Librarian பணிகளுக்கென மொத்தம் 584 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B.E, Diploma, PG Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். ஊதிய விவரம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.44,900/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம்: Principal பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2000/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட