Posts

Showing posts from March 26, 2013
யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின் முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது. கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நாடு முழுவதும் இருந்து 7.8 இலட்சம் பேர் யூ.ஜி.சி.யின் நெட் தேர்வை எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியானது. இந்த தேர்வில் 39, 226 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து 3,669 பேர் இளம் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.ugcnetonline.inஎன்ற இணையதளத்தில் காணலாம்.
கல்வி உரிமைச்சட்டத்தை அமல் படுத்திட மாநில அரசுகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்தார் . புதுதில்லியில், நடைபெற்ற செய்தி யாளர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர், ‘‘கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முக்கியமான நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்றுவதில் பல மாநில அரசுகள் இன்னமும் மிகவும் பிந்தைய நிலையிலேயே இருக் கின்றன என்பது உண்மையே என்ற போதிலும், இதனை அமல்படுத்துவதற்காக மேலும் கால அவகாசம் எதுவும் அளிக்கப்பட மாட்டாது.’’ என்று கூறினார்.  ஆயினும் கல்வி உரிமைச் சட்டத்தின் நிபந்தனைகளைப் பின் பற்றாத பள்ளிகள் குறித்த அரசின் நிலை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அப்பள்ளிகள் மிக விரைவில் அவற்றை நிறைவேற்றி விடும்’’ என்று மட்டும் கூறி அமைச்சர் சாதுரியமாக நழுவிக்கொண்டார்.  வரும் மார்ச் 31க்குள் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளைக் கறாராகப்பின்பற்றாத பள்ளிகள் சட்டத்தின்படி மூடப்பட்டாக வேண்டும். மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சென்ற நவம்பரில் கூடியபோ து கூட, கல்வி உரிமைச்சட்டத்தின் காலக்கெடுவை நீட்டிப்பது இல