Posts

Showing posts from October 17, 2014
TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கும் ... -புதியதலைமுறை தொலைக்காட்சி இந்தாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகததால், தேர்விற்காக காத்திருப்பவர்களும், குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் அது சந்தித்து வரும் சிக்கல்களின் எண்ணிக்கை எண்ணற்றதாக உள்ளது. நடத்தப்பட்ட தகுதித் தேர்விலும், அதற்கு பிறகான பணி நியமனத்திலும் தாமதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில்,இந்தாண்டிற்கான அறிவிப்பே இன்னும் வெளியாகாமல் உள்ளது. 2010-ல் அறிவிக்கப்பட்ட இந்த தகுதித் தேர்வு முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக அமல்படுத்தப்பட்டு தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு ஐந்தாண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.2015-ம் ஆண்டோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்தாண்டிற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் பல தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் இத்தேர்வு அறிவிக்க
அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு. தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் எண்: 07/2014 நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம். மொத்த காலியிடங்கள்: 652 பணி: Computer Instructor சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600 வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 56க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: BE, B.Sc (கம்ப்யூட்டர் சயின்ஸ்), BCA, B.Sc (தகவல் தொழில்நுட்பம்) உடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு வாரியம் முடிவு : ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாண்டு இல்லை-Dinakaran சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித் தேர்வுகளை நடத்தும் போதெல்லாம் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை நடத்துவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் நடந்த தகுதித் தேர்வில் போதிய ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாத காரணத்தால் 2011ம் ஆண்டில் 2 முறை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையும் சேர்த்தால் 4 தேர்வுகள் வரை நடந்துள்ளது. ஒவ்வொரு முறை தகுதித் தேர்வு நடந்து முடிந்ததும், கீ&ஆன்சர் வெளியான நாளில் இருந்தே தேர்வு எழுதியோர் தரப்பில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்துள்ளனர். அந்த வழக்குகளை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஆசிரியர் தேர
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறுமா??? NCTE என்ன கூறுகிறது ஒரு தெளிவான விளக்கம் ஆசியர் தகுதி தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் படி இந்தியாவில் உள்ள பள்ளிகளில் (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வேலைபார்க்கும் ஆசிரியர்களின் தகுதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிப்பதற்கு வழிவகுப்பதே இந்த தேர்வின் நோக்கம் ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் என்ன தகுதிகளை NCTE எவ்வாறு வரையறுத்துள்ளது 1) 1 முதல் 5 வரை ஆசிரியர்களாக பனியாற்ற DIPLOMO IN ELEMENTARY EDUCATION (D.E.E OR D.TEd) படித்திருக்க வேண்டும். அதில் ஆசிரியர் பட்டய படிப்பில் 50% மதிப்பெண் பெற வேண்டும் (அல்லது) NCTE Regulations 2002 படி 45 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அதன் உடன் TEACHER ELIGIBILITY TEST (TET ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் --------------------------------------- ---------------------------------------------------------------------------------- 2) 6 முதல் 8 ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பனியாற்ற BA/B.Sc 50 % மதிப்பெண் உடன் 2 ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பு படித்திருக்க வ