Posts

Showing posts from September 17, 2019
தமிழகத்திற்கு பொதுத்தேர்வு கிடையாது - செங்கோட்டையன் அதிரடி 5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைவருக்கும் கல்வி திட்டம் என்று மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு நிலை உள்ளது.தமிழகத்திற்கு அதை மனதில் வைத்துக்கொண்டுதான்,5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.எனவே 3 ஆண்டு காலத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்
Image
Flash News : PG TRB Online Exam 2019 - Hall Ticket And Revised Time Table Published! 2018 - 2019ம் ஆண்டிற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 க்கான கணினி வழித் தேர்வு 27.09.2019,  28.09.2019 மற்றும் 29.09.2019 தேதிகளில் நடைபெற உள்ளது.இத்தேர்விற்கு உரிய அனுமதி சீட்டு ( Admit Card)  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nicmin-ல் தேர்வர்கள் தங்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password)  உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time)  மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன் ( Original id Card)  விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையயும் ( Original Passport size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணையை திங்கள் மாலை அரசுத்தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கான இருதாள்கள் ஒரே தாள்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதையடுத்து ஏற்கனேவே வெளியிடப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மாற்றி, புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2020 மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது; மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அதன் முழுமையான விபரம் வருமாறு: மார்ச் 27 - மொழிப்பாடம் மார்ச் 28 - விருப்பப்பாடம் மார்ச் 31 - ஆங்கிலம் ஏப்.3 - சமூக அறிவியல் ஏப். 7 - அறிவியல் ஏப். 13 - கணிதம் * மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்