19 February 2013

கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நீடிக்கும் குழப்பம்

 சென்னை: அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது. 

அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில், 3,120 உதவி பேராசிரியர்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. டி.ஆர்.பி., மூலம் போட்டி தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது.

 பணி அனுபவத்துக்குஅதிகபட்சமாக, 15 மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும்,பி.எச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. பி.எச்டி., பட்டம் பெறாமல் எம்.பில்., பட்டத்துடன் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடனம், நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால்,5 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. போட்டி தேர்வு மூலம் தேர்வு நடைபெறாமல், நேர்முக தேர்வுக்கும், அனுபவத்துக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால், முறைகேடுகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, போட்டி தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்கள், கல்லூரி நிர்வாகம் மூலமே நிரப்பப்படுகின்றன. இதனால், அதிகளவில் பணம் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. இப்பணியிடங்கள், ஏழு முதல் 10 லட்ச ரூபாய் வரை விலை போவதாகவும் கூறப்படுகிறது. 

கேரள மாநிலத்தில், அரசுஉதவி பெறும் கல்லூரி பணியிடங்களை அரசுநிரப்புகிறது. ஆனால், தமிழகத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களை,கல்லூரி நிர்வாகங்களே நிரப்புகிறது. இதனால், அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து, அரசு உதவி பெறும் கல்லூரி பணியிடங்களைஅரசே நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. 

இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலர் பிச்சாண்டி கூறியதாவது: மாணவர்களுக்கான நேர்முக தேர்வுகளையே ரத்து செய்ய போராடும் நிலையில், நெட், ஸ்லெட் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு வைப்பது தவறான செயல். போட்டி தேர்வு நடத்தாமல், இப்போது இருக்கும் தேர்வு முறைகளிலேயே, ஒழுங்குபடுத்தி, நேர்மையான தேர்வு நடைபெற வேண்டும். கல்லூரி ஆசிரியர் தேர்வு பற்றி, அமைச்சர் தலைமையிலான குழு விரைவில் விவாதித்து அறிவிக்கும்என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.
தொடக்க கல்வித்துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10,000 பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வில் பாதிப்பு.

தொடக்க கல்வி துறையில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.தமிழகத்தில் பள்ளிகல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன, இதில் ஒரு அம்சமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

இதன் காரணமாக 2004ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர்.இப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை போல் பதவி உயர்வு வழங்க வாய்ப்பு இல்லை.

இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி துறையில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு வருகின்றனர். ஆனால் இப்படி வரும் பட்டதாரி ஆசிரியர்களது மூதுரிமை பள்ளிக் கல்வித்துறைக்கு வந்த நாள் ஒன்றையே குறிப்பிட்டு பின்பற்றப்படுகிறது. அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை மாற்றம் பெறுவதால் பணி காலத்தில்7 முதல் 10 ஆண்டுகள் வரை பதவி உயர்வு இழப்பு ஏற்படுகிறது என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில இணைச் செயலர் ராஜாமுகமது தெரிவிக்கிறார். ஒரே தேர்வு எழுதி பட்டதாரி ஆசிரியராக தொடக்க கல்வி துறையில் நியமனம் பெற்று பின்னர் பள்ளி கல்வித்துறைக்கு மாறிய சுமார் 10 ஆயிரம் பட்டதாரிஆசிரியர்களுக்கு இது மன வருத்தத்தை தருகிறது என அவர் தெரிவித்தார்.

இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள மனுவில் எந்தசூழ்நிலையிலும் தனி நபர் ஒருவர் பாதிக்கப்படக் கூடாது என்ற அரசின் எண்ணத்தை கருத்தில் கொண்டுபட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் வாரிய தர எண் அடிப்படையில் மூதுரிமை வழங்க நடவடிக்கை எடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என வேண்டியுள்ளனர்.
எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு

பாரதிதாசன், அழகப்பா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசுப் பணிகளில் இந்த கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு இணையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையான படிப்புகளுக்கு சான்றளிக்கும் குழுவின் கூட்டத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொழிலக வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானத்தை கவனத்துடன் பரிசீலித்த பிறகு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் படிப்பு, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று உத்தரவிடுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது. அரசுப் பணி, பதவி உயர்வுக்கு இதை வேதியியல் படிப்புக்கு இணையான படிப்பாகக் கருத வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...