Posts

Showing posts from April 23, 2015
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார். இரு தேர்வு முடிவுகளும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களில் மட்டுமே காண முடியும். அதன்படி கீழ்க்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து மதிப்பெண் பட்டியலையும் பிரதி எடுத்துக் கொள்ளலாம். இணையதள முகவரிகள்:  www.tnresults.n ic.in  www.dge1.tn.nic .in  www.dge2.tn.nic .in  www.dge3.tn.nic .in
TNPSC:குரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம். அடுத்த மாதம் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு நடைபெறஇருந்தது. இந்நிலையில், இத்தேர்வு ஜுன் 5,6,7, ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.79 பணியிடங்களுக்கான குரூப் 1 பிரதான தேர்வை எழுத 4389 பேர் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள்தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆய்வக உதவியாளர் பணி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர்களை தேர்ந்து எடுப்பதற்காக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒரே எழுத்துத்தேர்வை நடத்த உள்ளது. அந்த தேர்வின் வினாக்கள் 10-வது வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும். அதாவது கொள்குறி வினாக்கள் கொண்ட விடைத்தாள் தயார் செய்து ஓஎம்ஆர் ஷீட் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் வகையில் போட்டித்தேர்வு நடத்தப்படும்.  தேர்வு நடத்தி மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தி 1: