28 January 2013

ஆசிரியர் பற்றாக்குறை - வகுப்புகளை இழக்கும் மாணவர்கள்- Dinamalar

தமிழகமெங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையால், வகுப்புகள் நடப்பதே அரிதாக உள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில், வாரத்திற்கு 20 மணிநேர வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

பகுதிநேர விரிவுரையாளர்களைக் கொண்டு, நிலைமையை சரிசெய்யும் முயற்சிகள் நடந்தாலும், நிரந்தரமான ஆசிரியர்கள் நியமனத்தை, அரசு உடனடியாக மேற்கொண்டால் ஒழிய, இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதவிபெறும் கல்லூரிகளைப் பொறுத்தவரை, மாநிலமெங்கும் மொத்தம் 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், அரசுக் கல்லூரிகளைப்பொறுத்தவரை, 1,623 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. 

இத்தகவலை, பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு(AUT) வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியில், வணிகவியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, கணிதம் மற்றும் கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகள், பேராசிரியர் பற்றாக்குறை நிலவும் துறைகளில் முக்கியமானவை. 

சில மாதங்கள் முன்பு, 1,623 பகுதிநேர விரிவுரையாளர்களை உடனடியாக நியமித்து, அவர்களுக்கு, ஊதியமாக, மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரையில், உறுப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மேலும், பகுதிநேர விரிவுரையாளர் நியமனமும் முறைப்படியானதாக இருப்பதில்லை.

 பலபேர் தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்குமே தவிர, சிக்கலை சரிசெய்ய உதவாது என்று தொடர்புடைய வட்டாரங்கள் வேதனையுடன் தெரிவித்தன. சென்னையை எடுத்துக்கொண்டாலே, ஒரு துறைக்கு 20% வரை பேராசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. அப்படியிருக்கையில், கிராமப்புற பகுதிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

 சம்பளப் பிரச்சினை அனுபவம் வாய்ந்த ஒரு அசோசியேட் ப்ரொபஸர், மாதம் ரூ.80 ஆயிரம் ஊதியமாக பெறுகையில், இந்த பகுதிநேர விரிவுரையாளர்கள், வெறும் ரூ.10 ஆயிரம் மட்டுமே பெறுகிறார்கள். பணி பளுவும் அதிகம். மேலும், இவர்கள், தாங்கள் பணிபுரியும் கல்லூரியால், முன்னறிவிப்பின்றி, எந்நேரமும் பணிநீக்கம் செய்யப்படலாம்.

 இதைத்தவிர, அவர்கள், எம்.பில் மற்றும் பிஎச்.டி போன்ற உயர்படிப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. உதவிபெறும் கல்லூரிகள், பகுதிநேர விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.6,000 முதல் 8,000 வரைதான் தருகின்றன. அந்த சம்பளமும், உரிய நேரத்தில் தரப்படுவதில்லை. இந்த பகுதிநேர விரிவுரையாளர் பணி என்பது, உதவிபெறும் கல்லூரிகளைப் பொறுத்தவரை, சுயநிதி பிரிவுகளுக்கு அவர்களைப் பயன்படுத்தி, அதிக பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளது.
பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு 

ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. தகுதித்தேர்வு மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்துவேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது. 

அடிப்படை உரிமை இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:–குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கான அடிப்படை உரிமையாக உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அக்டோபர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதனை 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் எழுதினர். அதில் 19 ஆயிரத்து 261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 

மனு தள்ளுபடி அடிப்படை வசதிகள் இல்லாத, முறையாக அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 1993–ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஏராளமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதித்தேர்வு நடத்துவதில் தவறு இல்லை. இந்த தேர்வு அவர்களது வேலை வாய்ப்பினை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...