15 December 2022

 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி



நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2023 பிப்ரவரியில் குரூப் 2 முதன்மைத் தேர்வும், நவம்பரில் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை உள்ள 762 காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரி 23 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக 4000 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்



தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணவர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.


இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுநர்களிடமிருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.


பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக www.tngasa.in என்ற இணையதளம் இன்று உயர்கல்வித் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள் இன்று முதல் (15.12.2022) முதல் 29.12.2022 வரை பதிவு செய்யலாம்.


இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுநெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

 அண்ணா பல்கலை.யில் தமிழாசிரியா் பணி: டிச.20-க்குள் விண்ணப்பிக்கலாம்




அண்ணா பல்கலை., அதன் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக தமிழாசிரியா் பணியிடங்களுக்கு டிச.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலை.யில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு சிறந்த கல்விப் பின்னணி மற்றும் கற்பித்தல் திறன் கொண்ட கல்வித் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.


பல்கலை. துறைகளில் 6 பணியிடங்களும், உறுப்புக் கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ளன. பி.ஏ., எம்.ஏ. ஆகியவற்றில் தமிழில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு இணையான கிரேடு அவசியம். ஸ்லெட், நெட், செட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்காலிக ஆசிரியா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.


பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்விச் சான்றிதழ் நகல்களுடன் நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து பிடிஎஃப் வடிவில் மின்னஞ்சல் மூலமாகவோ dirtamildvt@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரியிலோ டிச.20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.


அசல் விண்ணப்பம், இணைக்கப்பட்ட சான்றிதழ்களை ‘முனைவா் பா.உமா மகேஸ்வரி, இயக்குநா், பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம் (CPDE Building), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025, தொலைபேசி எண்- 044-22358592, 22358593’ என்ற முகவரியில் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம்

 TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம்



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் இ.ஆ.ப. நியமனம் செய்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...