16 May 2022

 PGTRB - தெரிவுப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை 2022 இறுதியில் வெளியிட முடிவு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு!



2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 கணினி பயிற்றுதர் நிலை | நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notificatien ) No. 01 / 2021 , நாள் 09.09.2421 ன்படி 12. 02 , 2022 முதல் 20. 02. 2022 வரை நடைபெற்ற கணினி வழித் தேர்வுகளுக்கு 09.04.2022 அன்று உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன.


 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்களின் ஆட்சேபனைகள் 09.04.2022 மாலை 06.00 மணி முதல் 13.04.2022 மாலை 05.30 மணி வரை 29148 ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்முறைத் தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பகுதியாக ( Phared & amer ) பாடவாரியாக மட்டுமே பாடவல்லுநர்கள் அழைக்கப்பட்டு , விடைக்குறிப்பினை மறுஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைய குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும் இப்பணி முடிவுற்றதும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.



 

அதன் பின் விடைத்தாட்கள் கணினிவழி திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்தபட்சம் 45 நாட்கள் தேவைப்படும் அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசம் தேவை. தெரிவுப்பட்டியல் ஜீலை 2022 இறுதியில் வெளியிட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.





 டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO தேர்வர்களே.. ஈஸியா வெற்றி பெறணுமா?.. இதோ எளிய முறை...!!!!!




தமிழ்நாடு அரசின் இள நிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், நில அளவர் மற்றும் வரைவாளர் ஆகிய 7 வகையான பணி இடங்களுக்கு தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு வாயிலாக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


இதற்கிடையில் அரசு தேர்வுகளில் மிகவும் குறைந்த அளவிலான 10ஆம் வகுப்பு கல்வித்தகுதியை மட்டும் அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இத்தேர்விற்கு அதிக அளவிலான தேர்வர்கள் விண்ணப்பிப்பது வழக்கம் ஆகும். இப்போது நடப்பு ஆண்டில் 7,382 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


எனினும் இப்பணியிடங்களுக்கு மொத்தம் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக போட்டி அதிகரித்து இருக்கிறது. ஆகவே தேர்வர்கள் மிகவும் அதிகளவிலான மதிப்பெண்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. மொழிப் பாடத்தில் 100 மற்றும் பொதுஅறிவு பாடத்தில் 100 என மொத்தம் 200 வினாக்களுக்கு 1.5 மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றில் 180 கேள்விகளுக்கு தேர்வர்கள் சரியான பதிலை அளிக்கவேண்டும் என நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். தமிழ்மொழிப் பாடப்பிரிவில் தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.


இவை மிகவும் எளிமையான முறையில் அதிகமான மதிப்பெண்களை பெற்றுத்தரும் பகுதி ஆகும். அத்துடன் தமிழ் மொழித்தாள் தகுதித்தாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


6 -10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்தாலே 90 முதல் 95 மதிப்பெண்களை பெற்றுவிடலாம். இதேபோன்று பொதுஅறிவு பகுதியில் புவியியல், வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கும் 6-10ம் வகுப்பு பாட புத்தகத்தை முழுமையாக படித்துக்கொள்ள வேண்டும். இதைதவிரத்து நேரம் இருப்பின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாட புத்தகத்தை படித்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நடப்பு நிகழ்வுகளை நன்கு அறிந்து வைத்து இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

 நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.



 மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


 தற்போது அதனை மே 20 வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்???

 

நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக் குறையிலும் தி.மு.க. அரசு சிக்கியிருப்பதால் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு தேவை 18,000 கோடி . இவர்களெல்லாம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்சன் வழங்க சுமார் 300 கோடி தேவை. மேலும் புதிதாக ஆட்களை நியமிக்கும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் தேவைப்படும். ஆக , சுமார் 19,000 கோடி தேவை. அதனால் , ஓய்வு பெற அனுமதிக்காமல் 2 ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்துக்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடிதான் தேவைப்படும்.


 அதேசமயம் , ஆண்டுக்கு சுமார் 18,400 கோடி என 2 ஆண்டுகளுக்கு 36,800 கோடி ரூபாய் செலவினத்தை தவிர்க்க முடியும். அதனால் ஓய்வுபெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித் திருக்கிறது தி.மு.க. அரசு.


 ஒழுக்கம் தவறினால் குற்ற நடவடிக்கை: 'குரூப் - 2' தேர்வர்களுக்கு எச்சரிக்கை 




தேர்வறையில் ஒழுக்கம் தவறி நடந்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., எச்சரித்துள்ளது.தமிழக அரசு துறைகளில், 'குரூப் 2, 2 ஏ' ஆகிய பதவிகளில், 5,529 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியே, வரும், 21ம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த தேர்வில் பங்கேற்க, 11.78 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.விண்ணப்ப பரிசீலினை முடிந்து, விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட்கள் வழங்கப் பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டில், தேர்வு மையங்களின் முகவரிகள் குறிப்பிடப் பட்டுள்ளன.இந்த தேர்வு, 38 மாவட்டங்களில், 4,012 மையங்களில் நடக்கிறது. 


தேர்வர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, பல்வேறு வழிகாட்டல்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தேர்வறையில் விதிகளை மீறி நடந்தால், அவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட வழிகாட்டல்:


* ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.


சுயவிருப்பத்தின்படி தேர்வு மையம் மாற்றப்படாது. தேர்வர்களுக்கான நிபந்தனைகளை சரியாக படித்து கொள்ள வேண்டும்.


● தேர்வறையில், மற்ற தேர்வர்களிடம் கேட்டு விடை எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை பார்த்து விடைகளை காப்பி அடித்தல், மற்றவர்கள் எழுத விடைகளை காட்டுதல், 'பிட்' அடித்தல், அறை கண்காணிப்பாளர், ஊழியர்கள் உள்ளிட்டோரின் உதவியை பெற்று விடையை தேர்வு செய்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.


● மொபைல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்து வருவது கூடாது.


● விடைத்தாளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல், தேர்வறைக்கு வெளியே எடுத்து செல்வதும், பார்கோடு பகுதியை கிழிப்பதும் முறைகேடு புகார்களாக கருதப்பட்டு, தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வறையில் அறை கண்காணிப்பாளர்களிடம் ஒழுக்கம் தவறி நடந்து கொள்ளக்கூடாது


● இதுபோன்று முறைகேடாக நடந்து கொள்வது, காப்பியடிப்பது போன்றவற்றில் ஈடுபடுவோர், மீண்டும் டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வை எழுத தடை விதிப்பதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...