Posts

Showing posts from August 15, 2016
கல்வி கொள்கை கருத்து தெரிவிக்கசெப்., 15 வரை அவகாசம் நீட்டிப்பு புதிய கல்விக் கொள்கை அறிக்கை, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்ப, கூடுதலாக ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான புதிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த கொள்கையின், வரைவு அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில், ஜூலையில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை, ஜூலை, 31 வரை தெரிவிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டது. பின், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தி, தமிழ், உருது, மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில், கல்விக் கொள்கை அறிக்கை மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை தெரிவிக்க, செப்., 15 வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது