Posts

Showing posts from September 27, 2022
Image
  8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு வரும் 29ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் தமமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் வரும் 29ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 8 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.  இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 29 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார். தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Image
  பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல்வேறு காரணங்களால் தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு தற்போது மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பயன் அடைய உள்ளனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது பழைய முறைப்படி 58 ஆக இருந்தது. இந்த நிலையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்கள ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீட்டித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.