12 March 2014

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவைப்பு. 

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (12.03.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 21வழக்குகளும்விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் சார்பில் அட்வகட் ஜெனரல் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இன்று ஆஜராக வில்லை. 

வழக்கின் முழுவிவரத்தையும் நீதியரசர் முன் வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். அட்வகட் ஜெனரல் இன்று ஆஜராக இயலாத நிலை உள்ளதால் வழக்கினை வேறு தேதிக்குஒத்திவைக்க அரசு சார்பில் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் வழக்கினை வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இன்று(12.03.14) நீதியரசர் நாகமுத்து அவர்கள் விடுமுறையில் இருந்ததால் TRB.சார்த TET/PG வழக்குகள் விசாரணை எதுவும் நடைபெறவில்லை
2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு. 

2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.4 வாரங்களுக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு.கடந்த 2012 நவம்பரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுத்துத் தேர்வு நடைபெற்றது.முடிவுகளை வெளியிடாமல் நேர்முகத் தேர்வுக்கு அழைத்ததாக கோபிகிருஷ்ணா என்பவர் வழக்கு.
தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு -- தின மலர் நாளேடு

அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என தாக்கல் ஆன வழக்கில், அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

மதுரை மாவட்டம் பாலமேடு கண்ணன் உட்பட, நான்கு பேர் தாக்கல் செய்த மனு: தகுதி தேர்வில்(டி.இ.டி) வெற்றி பெற்றவர்களை ஆசிரியர்களாக அரசு நியமிக்கிறது. இதன்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தகுதிகள் நிர்ணயித்து ஆசிரிய தேர்வு வாரிய (டி.ஆர்.பி)தலைவர் 2012ல் அறிவிப்பு வெளியிட்டார். 

அதில் டி.இ.டி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பிளஸ் 2 பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சலுகை வழங்கப்படும்.பின் பணி நியமனம் மேற்க்கொள்ளப்படும். என உள்ளது. ஒவ்வொருவரும் பல்வேறு கால கட்டங்களில் பிளஸ் 2 பட்டம் படித்து வெளியேறுகின்றனர். 

இதனால் மதிப்பெண்ணில் அதிகம், குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிளஸ் 2, பட்டப்படிப்பிற்கு சலுகை வழங்குவதால் டி.இ.டில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது. இட ஒதுக்கீடு பின்பற்றபடுகிறதா என தெரிவதில்லை.நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை. 

அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' இவ்வாறு, அவர் குறிப்பிட்டார் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் சார்பில் மூத்த வக்கில் அஜ்மல்கான் ஆஜரானார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி 'பணிநியமனம் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பைப் பொறுத்து அமையும்' என்றார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதல் தேர்ச்சி: இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி -- தின மணி நாளேடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு புதன்கிழமை (மார்ச் 12) தொடங்குகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. 

நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற உள்ளது. 

அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர். 

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில், பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. 

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மண்டல மையங்கள்: ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெறும் மாவட்டங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையங்களின் விவரம்: 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை - எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் எதிரில், மதுரை -20. தொலைபேசி எண்: 0452-2531754. 

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி - ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதி, திருச்சி -01. தொலைபேசி எண்: 0431-2416648. 

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி - சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலை, சேலம் -7. தொலைபேசி எண்: 0427-2412160. 

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் - ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் பஸ் நிலையம் அருகில், கும்பகோணம். தொலைபேசி எண்: 0435-2431566. 

சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 319, ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, சென்னை - 44. தொலைபேசி எண்: 044-22417714.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...