Posts

Showing posts from November 24, 2022
Image
  அண்ணா பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அரிய வாய்ப்பு! 2001-02ம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் கலந்து கொள்ளலாம் என சிறப்பு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.  அதன்படி, மாணவர்கள் தேர்வுக்கடணத்துடன் சேர்த்து ரூ.5000 கூடுதலாக செலுத்த வேண்டும். அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர்.23 முதல் டிசம்பர் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  மொத்தம் 9 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடக்கவுள்ளது. லயோலா ICAM இன்ஜினீயரிங் காலேஜ், விழுப்புரம் இன்ஜினியரிங் கல்லூரி, ஆரணி இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, கோவை அண்ணா பல்கலைக்கழக கிளை , ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஜினியரிங் கல்லூரி, மதுரை அண்ணா பல்கலைக்கழக கிளை, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக கிளை உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளது. மாணவர்கள் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி, அண்ணா பல்கலைக
Image
  மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு.. இன்றே கடைசி நாள்... வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!! மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளதால் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 24 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.ctet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.