Posts

Showing posts from February 19, 2015
காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு முதுகலை ஆசிரியர் தேர்வை டிஆர்பி அறிவிக்குமா? தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை மீண்டும் அதிகரித்துள்ளதால் முது கலை ஆசிரியர் பணி தேர்வை டிஆர்பி அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் காலியாகின்றன. இதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் பிற கல்வித்தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். பட்ட தாரி ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் தகுதி தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 2013ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டதன் காரணமாக பணி நியமனம் கடந்த ஆண்டு இறுதிவரை நீடித்தது. இதனால் கடந்த ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பாட வாரியாக காலியாக உள்ள 1,807 ஆசி ரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த நவம்பர் 7ம் தேதி அறிவிப்பு வெளியிட் டது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜனவரி 10ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம
50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆளுநர் உரையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம். சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரையாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். அதேபோல, அரசு ஊழியர்களின் ப