30 May 2022

TN TET தேர்வு: ஜூலை இறுதிக்குள் நடத்த பிளான். வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!!




தமிழகத்தில் அரசுபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வு வாயிலாக நியமனம் செய்யப்படுகிறது


இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. இவற்றில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 -5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடையவர்கள் எனவும் 2ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 -8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடைவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019 ஆம் வருடம் இந்த தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.


தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதை அடுத்து அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. அதன்பின் இந்த வருடத்துக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதார்கள் பதிவு செய்திருந்தனர்.


இந்த தேர்வு கொள்குறி அடிப்படையில் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வாழ்நாள் முழுதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இப்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இத்தேர்வுகள் நிறைவடைந்ததும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தேர்வு வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 12ம் வகுப்பு வேதியியல் பொதுதேர்வு - 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு


+2 வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.




 புதுவையில் ஜூன் 23-ல் பள்ளிகள் திறப்பு: சனிக்கிழமைகளில் விடுமுறை




புதுச்சேரியில் ஜூன் 23ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.


கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஜூன் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.


11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...