Posts

Showing posts from May 20, 2013
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு! தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.பள்ளிப் படிப்பானாலும், பட்டப் படிப்பானாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. அவ்வாறு பதிவு செய்திருந்தால் மட்டுமே, சீனியாரிட்டி அடிப்படையில், அரசுப் பணி, ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.பதிவு செய்த அனைவருக்குமே அரசுப் பணி கொடுக்க முடியாது என்பதால், கடந்த தி.மு.க., ஆட்சியில், 300, 200, 150 ரூபாய் என்ற வகையில், பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், மாதத்தில் ஒரு முறை, தனியார் நிறுவனங்களை அழைத்து, பதிவுதாரர்களுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.மாநிலம் முழுவதும், தற்போதுள்ள 37 வேலைவாய்ப்பு மையங்களில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், 13.9 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச், 31ம் தேதி நிலவரப்ப
ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்வு இல்லை ஆசிரியர்கள், மாணவர்கள்ஏமாற்றம் -Dinamalar ஆரம்ப பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 54 புதிய ஆரம்ப பள்ளிகளை துவக்கவும், 50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால் இதில் ஆரம்ப பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகதரம் உயர்த்தாததால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் அரசு துவக்கப் பள்ளி மாணவர்கள் 6ம் வகுப்புக்கு சேருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். புதிய 54 ஆரம்ப பள்ளிகளும் வரும் ஜூன் மாதம் முதல் செயல்பட வேண்டும். இதில் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர்கள்முருகேசன், மணிமேகலை, மாவட்ட செயலாளர் சுடலைமணி, மாவட்ட தலைவர் ராஜ்குமார், பொருளாளர் ரமேஷ், மாநில