20 April 2015

வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி: ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி முடிவு!

போலி சான்றிதழ், இன வாரியான முன்னுரிமை வழங்குதல், தகுதி நிர்ணய குழப்பம் ஆகியவற்றால் கல்வித்துறையில் புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்த நாளில் இருந்தே ஆசிரியர் தேர்வு வாரியம் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 400க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் வெயிட்டேஜ் மதிபெண் தொடர்பாகவும், இன வாரியான ஒதுக்கீடு வழங்காதது குறித்தும் தான் இருக்கிறது. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பில் அதிக கவனம் எடுப்பதாக தெரியவில்லை. அதிமுக ஆட்சி இன்னும் 1 ஆண்டுதான் உள்ள நிலையில் இப்படியே வழக்குகளை இழுத்தடித்துவிட்டு தேர்தலை சந்திக்க அதிமுக கட்சிமுடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய நடவடிக்கைகளை நீதிமன்றம் தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது. ஆனாலும் அரசு கொள்கை முடிவு, அரசு உத்தரவுகளை காட்டி ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வழக்குகளை இழுத்தடித்து வருகின்றனர்.

இதனால் பல ஆயிரம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிரான பிரச்னைகள் தொடர்கின்றன. ஆசிரியர் தேர்வில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர், பார்வையற்ற பட்டதாரிகள் தொடர்ந்த வழக்கில் அரசு செயலாளர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஆசிரியை போலி சான்று மூலம் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. அரசு கலைக் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு, கணினி ஆசிரியர் நியமனத்தில் முன்னாள் ராணுவத்தினர் இட ஒதுக்கீட்டில் குளறுபடி, இது போன்ற பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்துவருகிறது ஆசிரியர் தேர்வு வாரியம். இவை எல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டும் போது ஏதாவது ஒரு அரசு உத்தரவைக் காட்டி இதன்படி நாங்கள் செய்தோம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தப்பித்து வருகின்றனர்.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கண்டபிறகே அடுத்தகட்ட நியமனத்துக்கான பணிகள் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்த அரசின் காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் இப்படியே விட்டுவிட்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் புதிய நியமனங்களை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். பட்டதாரிகள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 ஆண்டு பி.எட். படிப்புக்கான கல்வித் திட்டம் தயார்- துணைவேந்தர்.

இரண்டு ஆண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கல்வித் திட்டங்கள் தயார்நிலையில் உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி,நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டது.

இந்த வழிகாட்டுதலின்படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2015-16கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகளாகஉயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி கல்வித் திட்டத்தையும் என்.சி.டி.இ.வெளியிட்டது.

அதன்படி, இரண்டாண்டு பி.எட். படிப்பில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன் - ஒருங்கிணைந்த கல்வி ஆகிய 4 தலைப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுநர்களும் யோகா கற்பது கட்டாயமாக்ப்பட்டுள்ளது.

மேலும், பி.எட். கல்வித் திட்டம் மூன்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது தியரி (பாடம்), செய்முறை பயிற்சி, தொழில் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் பயிற்சிக்கு மொத்த படிப்புக் காலத்தில் 25 சதவீத காலத்தை ஒதுக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நிலையில், படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பி.எட். கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், வரும் கல்வியாண்டில் பி.எட். படிப்பு தமிழகத்தில் ஓராண்டாக இருக்குமா அல்லது 2 ஆண்டுகளாக உயர்த்ப்பட்டுவிடுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,இரண்டு ஆண்டு பி.எட்., எம்.எட்.படிப்புக்கான கல்வித் திட்டம், பாடத்திட்டங்களை தமிழ்நாடு ஆசிரயிர் கல்வியியல் பல்கலைக்கழகம் தயார் நிலையில் வைத்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியது: தமிழகத்தில் பி.எட். ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்பது நீதிமன்ற தீர்ப்பைப் பொருத்தே அமையும். இருந்தபோதும், என்.சி.டி.இ. அறிவுறுத்தலின்படி 2 ஆண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கல்வித் திட்டம், மாதிரி பாடத் திட்டங்களை உரிய வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழகம் தயார் செய்துள்ளது. இதில் மாணவர் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தீர்ப்பைப் பொருத்து, கல்வித் திட்டத்தை கல்லூரிகளுக்கு உடனடியாக அச்சடித்த வழங்கும் வகையில் பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என்றார்.
உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்

ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முன்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளநிலையில் இவ்வழக்கு, நாளை 21.04.2015 அன்று கோர்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்....

மேலும் இவ்வாதமே இறுதி என்பதால் எல்லா கோப்புகளோடு உச்சநீதிமன்றம் விரைந்துள்ளனர் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்பதோடு மட்டுமில்லாமல் தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....

டி.இ.டி தேர்வர்கள் 30,000 பேர் மட்டுமல்லது, பி.எட் பட்டதாரிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் என பலரும் இவ்வழக்கை எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Article by
P.Rajalingam Puliangudi...
அரசு பேச்சு நடத்தாவிட்டால் 'ஸ்டிரைக்':'ஜாக்டோ' அறிவிப்பு

'ஆசிரியர் சங்கங்களுடன், அரசு பேச்சு நடத்தாவிட்டால், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ' அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை உருவாக்கி உள்ளன. இக்குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மார்ச் 8ம் தேதி, மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடந்தது. இரண்டாம் கட்டமாக நேற்று, 32 மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டங்கள் நடந்தன. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சென்னை, சேப்பாக்கத்தில், ஆசிரியர்கள் லிங்கேசன், சத்தியநாதன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்க மாநில தலைவர், சங்கரபெருமாள் பேசுகையில், ''ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து, ஜாக்டோ குழுவுடன், அரசு பேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் என, போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்,'' என்றார்.

கோரிக்கைகள் என்ன?
*ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் தர வேண்டும்
*ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை, மத்திய அரசின் ஊதியம் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.
*பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.
*ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நியமித்த ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...