17 March 2024

 நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 1,377 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.!!!





நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 1,377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது.


பெண் பணியாளர் செவிலியர் 121, மெஸ் ஹெல்பர் 442, இளநிலை செயலக உதவியாளர் 381, லேப் அட்டெண்டன்ட் 161 உள்ளிட்ட இதர பணிகளுக்கு 10 முதல் முதுகலை வரையிலான தகுதிகள் உள்ளன. மேலும் விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 NEET, JEE Exams: நீட், ஜே.இ.இ தேர்வு தேதிகளில் மாற்றமா? என்.டி.ஏ விளக்கம்





மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடையும் நிலையில், JEE முதன்மை 2024 அமர்வு 2 தேர்வு மற்றும் நீட் (NEET UG 2024) தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.


முன்னதாக வெளியிடப்பட்ட காலண்டரின்படி, கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை 2024 அமர்வு 2 ஏப்ரல் 4 முதல் 15 வரை நடத்தப்படும். அதேநேரம் JEE முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 1 மற்றும் 15 க்கு இடையில் நடைபெறத் திட்டமிடப்பட்டது, ஆனால் அறியப்படாத காரணங்களால் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டது.


இதேபோல், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது, அதற்கான விண்ணப்ப திருத்தம் மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும்.


"JEE முதன்மை அமர்வு 2 மற்றும் NEET தேர்வுகள் அட்டவணைப்படி இருக்கும் என்று indianexpress.com க்கு தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், CUET தேர்வு அட்டவணை விண்ணப்பப் பதிவு முடிந்ததும் மதிப்பாய்வு செய்யப்படும், மேலும் அட்டவணையின்படி தேர்வை நடத்த முயற்சிப்போம்,' என்று தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி கூறினார்.


அசல் அட்டவணையின்படி, இந்த ஆண்டு, CUET UG 2024 தேர்வு மே 15 முதல் 31, 2024 வரை தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மற்றும் கடைசி தேர்வு முடிந்த மூன்று வாரங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு நகர அறிவிப்பு ஏப்ரல் 30 முதல் வெளியிடப்படும், மேலும் அட்மிட் கார்டுகள் மே 2024 இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும்.


யு.ஜி.சி தலைவர் எம் ஜகதேஷ் குமார் இது குறித்த தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


இதற்கிடையில், CA மே மாத தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) விரைவில் வெளியிடவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ காலண்டரின்படி, சி.ஏ அடிப்படை பாடத் தேர்வு ஜூன் 20, 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இடைநிலை குரூப் 1 தேர்வுகள் மே 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும், குரூப் 2 தேர்வுகள் மே 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படும். சி.ஏ ஆகுவதற்கான கடைசி படியான சி.ஏ இறுதித் தேர்வு, மே 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் குரூப் 1, மற்றும் குரூப் 2 தேர்வு மே 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். திருத்தப்பட்ட அட்டவணை மார்ச் 19 மாலை வெளியிடப்படும்.

 SSC: மத்திய அரசு வேலை வாய்ப்பு; 2049 பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்




மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 12 ஆம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,049 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2024


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2049


10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள்


Lab Attendant, Binder, Sanitary Inspector, Senior Projectionist, Field cum Laboratory Attendant, Nursing Orderly, Driver cum Mechanic, Workshop Attendant, Boiler Attendant, Technical Operator, Photographer, Field cum Lab Attendant, Photo Artist, Canteen Attendant, Compositor, Field Attendant, MTS, Library Clerk, Staff car Driver, Medical Attendant,


12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள்


NURSING OFFICER, TECHNICAL OFFICER, SENIOR SCIENTIFIC ASSISTANT, SENIOR RESEARCH ASSISTANT, ASSISTANT TECHNICAL OFFICER, JUNIOR CHEMIST, AGRICULTURE ASSISTANT, SENIOR TECHNICAL ASSISTANT, MEDICAL LABORATORY TECHNOLOGIST, PHARMACIST, AYURVEDIC PHARMACIST, LABORATORY ASSISTANT, Lab Assistants, Junior Technical Assistants, Laboratory Technician, Clerk, Senior Surveyor, Carpenter cum Artist, Receptionist / Ticketing Assistant, Junior Engineer, Senior Technician Assistant, Offset Machine man, Technical Clerk, Field Assistant, Senior Photographer, Preservation Assistant, Senior Conservation Assistant, Data Entry Operator (DEO), Clerk, Store Keeper, Photo Assistant, Library Clerk, Library Attendant, Stockman, Junior Computer


டிகிரி முடித்தவர்களுக்கான பதவிகள்


Store Keeper, Junior Engineers, Scientific Assistant, Field Assistant, Technical Officer, Dietician, Technical Superintendent, Textile Designer, Senior Scientific Assistant, Girls Cadet Instructor, Library and Information Assistant, Junior Technical Assistant, Senior Technical Assistant, Junior Zoological Assistant, Technical Officer, Scientific Assistants, Instructors, Junior Scientific Assistant, Senior Radio Technician, Research Associate, Tutor, Perfusionist, Store Incharge, Medical Record Officer, Nursing Officer, Dietician, Investigator, Assistant Curator, Assistant Scientific Officer, Wildlife Inspector, Assistant Extension Officer, Assistant Central Intelligence Officer, Assistant Drug Inspector, Legal Assistant, Junior Accounts Officers, Data Processing Assistant, DEO, Upper Division Clerk, Geographer 


கல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பதவி வாரியாக 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பதவிகளுக்கு பதவியை பொறுத்து கூடுதல் தகுதி தேவைப்படும்.


வயதுத் தகுதி: 01.01.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு வயது வரம்பு கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு தளர்வு உண்டு.


சம்பளம் 


PB-1 ரூ. 5200 - 20200/- + GP ரூ.2400 


PB-2 ரூ. 9300 - 34800/- + GP ரூ. 4200


விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. இருப்பினும் SC, ST, PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.


தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 25 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள் இடம்பெறும். 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/Portal/Apply என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.03.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Phase-XII_Notification_2024_26022024.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.

 TNPSC Group 4 பயிற்சித் தொடர்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 1!




TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக, குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ.வுக்கு, பலர் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் புவியியல் பகுதியில் சராசரியாக 8 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, புவியியல் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம். 


சூரியக் குடும்பம்(Solar System): சூரியக் குடும்பம் என்பது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் ஆங்கிலத்தில் சொல்லும் சோலார் சிஸ்டம் என்ற சொல்லானது, ''Sol''என்ற லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது. சோலார் என்ற சொல்லானது ''சூரியக்கடவுள்'' என்னும் அர்த்தத்தைத் சுட்டிக் காட்டுகிறது. 


பெருவெடிப்பு(Big Bang): பெருவெடிப்பு என்பது ஒரு வெடிப்பு நிகழ்ந்ததன்மூலம், வானில் கணக்கற்ற நட்சத்திரங்களும், சிறு சிறுகோள்களும் உருவாகிய நிகழ்வு ஆகும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தது தான், பேரண்டம் (Universe) என அழைக்கப்படுகிறது. இதனை அண்டம் (Cosmos) என்றும் கூறுகின்றனர். 


பேரண்டத்தின் படிநிலை(Hierarchy Of The Universe): பேரண்டத்தின் படிநிலையில் பேரண்டம், விண்மீன் திரள் மண்டலம், சூரியக் குடும்பம், கோள்கள், துணைக்கோள்கள் எனப் படிப்படியான வரிசை இருக்கிறது.


கோள்கள்: (Planets): ''கோள்'' என்றால் சுற்றி வருபவர் என்று பொருள். சூரியக்குடும்பத்தில் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் சுற்றி வருகின்றன. எனவே, அதனை கோள்கள் என்கிறோம். குறிப்பாக, புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய ஒன்பது கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. 


சூரியனின் அளவு: சூரியனின் அளவு என்பது 1.3 மில்லியன் மடங்கு பூமியைத் தனக்குள் கொண்டு இருக்கும் அளவில், மிகப் பெரியது ஆகும். 


சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. ஒரு விண்கலத்தை நாம் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் சூரியனை நோக்கி பூமியில் இருந்து அனுப்பினால், அது சூரியனைச் சென்றடைய 21 ஆண்டுகள் பிடிக்கும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


ஒளியாண்டு(Light Year): ஒரு ஒளியாண்டு என்பது, ஒளி ஓராண்டில் பயணிக்கக் கூடிய தொலைவு ஆகும். ஒளியின் திசைவேகம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ.ஆகும். ஆனால், ஒலியானது விநாடிக்கு 330 மீட்டர் என்ற வேகத்தில் மட்டுமே பயணிக்கும். 


மிகவும் வெப்பமான கோள் வெள்ளி: சூரியக் குடும்பத்தில் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் கோள், வெள்ளி. சூரியனுக்கு அடுத்து இருக்கும் புதனை விட, வெள்ளி தான் வெப்பம் அதிகம் கொண்ட கோளாக கருதப்படுகிறது. ஏனெனில், வெள்ளிக்கோள் தான், மிக அடர்வான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. 96 விழுக்காட்டுக்கும் அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு இந்த வளிமண்டலத்தில் உள்ளது. இந்த வளிமண்டலத்தில் சல்ஃபூரிக் அமில மேகங்களின் எதிரொளிப்பும் உள்ளது.


சூரிய அண்மை(Perihelion): பூமி தன் சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வு, சூரிய அண்மை எனப்படுகிறது. 


சூரிய சேய்மை(Aphelion): பூமி, தன் சுற்றுவட்டப்பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வு, சூரிய சேய்மை எனப்படுகிறது.

 கல்வியைக் காவிமயமாக்க முதல்வர் ஸ்டாலின் எப்படி துணைபோகிறார்? இதுதான் பாசிச எதிர்ப்பா? சீமான் ஆவேசம்!




பாஜக அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா? என திமுக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி 'பிஎம் ஸ்ரீ பள்ளிகளை' தமிழகத்தில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. 


தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தற்போது மெல்ல மெல்ல பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை நுழைப்பது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.



புதிய கல்விக் கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாகும். அதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திமுக அரசு புதிதாக குழு அமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.


 பொதுப் பட்டியலிலுள்ள கல்வியை, மத்திய பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு ஒற்றை மயத்தையும், காவிக் கொள்கையையும் திணிக்கும் பொருட்டு மோடி அரசால், எதேச்சதிகாரப் போக்கோடு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றெனக் கூறி, புதிதாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு.


ஆனால், ஓராண்டுக்குள் தேசியக் கல்விக் கொள்கைக்கு சாதகமாக மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதாக குற்றம் சுமத்தி, அக்குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் விலகியது திமுக அரசு உருவாக்கவுள்ள கல்விக் கொள்கையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்கியது. 


அதனைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையின் கூறான இல்லம் தேடிக்கல்வியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதும், தமிழக அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்ததும், பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை விமர்சித்ததற்காக ஆசிரியர் உமா மகேசுவரியை அண்மையில் பணி இடைநீக்கம் செய்து தண்டித்ததும் திமுக அரசின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது.


தற்போது அத்தனை சந்தேகங்களையும் உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் வர்ணாசிரம கல்விக் கொள்கையை முற்று முழுதாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்த 'பிஎம் ஸ்ரீ பள்ளிகளை' தொடங்கும் திமுக அரசின் முடிவு பாஜகவின் கைப்பாவையாகவே திமுக செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது. 


மாநிலத் தன்னாட்சியென வாய்கிழியப்பேசும் திமுக, மாநில அரசின் தன்னுரிமையைக் காவுகொடுத்து, பாஜக அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா?


சனாதனத்திற்கு எதிரானது திராவிடமென முழங்கும் முதல்வர் ஸ்டாலின், கல்வியைக் காவிமயமாக்க எப்படித் துணைபோகிறார்?. இதுதான் சமூகநீதி ஆட்சியா?. இதுதான் இருளகற்றும் விடியல் ஆட்சியா? இந்துத்துவ பாஜக அரசு முன்வைக்கும் ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் உங்களது பாசிச எதிர்ப்பா முதல்வரே? இதுதான் ஆரியத்தைத் திராவிடம் வீரியமாக எதிர்க்கின்ற முறையா?.


மத்திய அரசு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த ஒரு துரோகம் போதாதா? மக்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழக மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; திராவிட ஆட்சியின் மூலவரான அறிஞர் அண்ணா அவர்களுக்கே செய்யும் கொடுந்துரோகமாகும். 


ஆகவே, இவ்விவகாரத்தில் திமுக அரசு இனியாவது தனது தவற்றை உணர்ந்து, பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, சமூகநீதி அடிப்படையில் தனித்துவமிக்க மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

 ஜூன் 3-ல் ஸ்லெட் தகுதித் தேர்வு அறிவிப்பு




கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உதவும் 'ஸ்லெட்' தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்படும் என நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.msuniv.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான நெட் தேர்வை யுஜிசியாலும், மாநில அளவிலான ஸ்லெட் தேர்வு குறிப்பிட்ட ஒரு பல்கலைக்கழகத்தாலும் நடத்தப்படும்.


அந்த வகையில் 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்தப்படும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


 


இந்நிலையில், ஸ்லெட் தேர்வுக்கான தொடக்கநிலை அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஸ்லெட் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. மொத்தம் 43 பாடங்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி முடிவடைய உள்ளது.


தேர்வுக்கான கல்வித் தகுதி, பாடங்கள், தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் கூடிய முழு அறிவிப்பு மார்ச் 20-ம் தேதி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.msuniv.ac.in) வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.சாக்ரடீஸ் அறிவித்துள்ளார்.


ஸ்லெட் தேர்வை முதுகலைப் பட்டதாரிகள் எழுதலாம். தற்போது முதுகலைப் படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்போரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இணையதள முகவரி:


கூடுதல் விவரங்களுக்கு www.msuniv.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...