கணினி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் TRB தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
14 October 2014
டிசம்பர் 21ல் எழுத்து தேர்வு குரூப்-4 பதவியில் 4963 காலி பணியிடம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்றுவெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக் கெழுத்து தட்டச்சர்- 331, வரித் தண்டலர் -22, வரை வாளர்-53, நில அளவர்- 702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். தேர்வுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்கு உரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வுக்கட்டணம் செலு த்த வேண்டும். தேர்வு கட்டணங்களை செலுத்த நவம்பர் 14ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12ம் தேதி இறுதி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடைபெறும். இத்தேர்வு மாவட்ட, தாலுகா என 244 மையங்களில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சந்தேகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு
தேர்வு குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், தமிழகத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உள்ளன.
அரசாணை : கடந்த, 2012ம் ஆண்டுக்கு பின், தமிழகம் முழுவதும், அங்கன்வாடி பணியாளர், 8,264 பேர், குறு அங்கன்வாடி பணியாளர், 427 பேர், உதவியாளர், 8,497 பேர் என, 17,?90 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில், அதற்கான பணியை, அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நவ., 15ம் தேதி அரசு அறிவிப்புப்படி, அக்., 25ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்று, நவ., 5ம் தேதிக்குள் நேர்காணல் நடத்தி, நவ., 15ம் தேதிக்குள், பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு. அங்கன்வாடி பணியில், இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மாறுதல் வழங்கிய பின் தான், காலியிடம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளதால், பணி நியமனம் டிசம்பர் இறுதி வரை செல்ல வாய்ப்புள்ளது.
5 கி.மீ., : அங்கன்வாடி அமைப்பாளர் பணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு, எட்டாவது வரை படித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட மையத்தில் இருந்து, 5 கிலோ மீட்டருக்குள் வசிக்க வேண்டும்.
பொது பிரிவு, தாழ்த்தப்பட்டவர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் என, ஒவ்வொரு மையம் வாரியாக, ஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்படும். அதனடிப்படையில், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...