Posts

Showing posts from February 2, 2015
ரயில்வே குரூப் - சி பணிக்கு இனி கல்வி தகுதி பிளஸ் 2 ரயில்வே துறையில், 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர். இதில், குரூப் - சி, குரூப் - டி பணிகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ள, சென்னை ரயில்வே தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும், 21 வாரியங்கள் உள்ளன. இதுவரை, எழுத்தர், டிக்கெட் கலெக்டர், கமர்சியல் எழுத்தர், கணக்கு எழுத்தர் உள்ளிட்ட குரூப் - சி பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 என, கல்வித் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வித் தகுதியை உயர்த்தி, ரயில்வே வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவு, புதிய பணி நியமனங்களுக்கு பின்பற்றப்படும். கடந்த, டிசம்பர், 27ம் தேதிக்கு முன் வெளியான குரூப் - சி பணி நியமன அறிவிப்புகளுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.இவ்வாறு, அவர் கூறினார்.
பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 200 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும் : மாணவர்கள் கோரிக்கை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் அசோக் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக 200 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும். சான்று சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் பார்வையற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும். பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 100 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை சிறப்பு நேர்காணல் நடத்தி நிரப்ப வேண்டும். பார்வையற்றோருக்கு கடந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது போல இந்த ஆண்டும் பார்வையற்றோருக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். பார்வையற்றோருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றை நடத்த அரசு ஆவன செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் இருந்தது.