7 January 2015

பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல்

அரசுக் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்காக 1,093 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2013-ஆம் ஆண்டுமே மாதம் வெளியிடப்பட்டது.இந்தப் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. .

கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். நேர்காணலுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் வழங்கப்பட்டது.நேர்காணல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை பல்வேறுகட்டங்களாக நடைபெற்றது.

இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:உதவிப் பேராசிரியர் நியமனத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல் சம்பந்தப்பட்ட துறையிடம் வழங்கப்படும் எந்தவொரு பணியாளர் தேர்வு அமைப்பும்இதுவரை செய்யாத வகையில், இந்தப் பணி நியமனத்துக்கான நேர்காணல்கள் முடிந்ததும் உடனுக்குடன் தேர்வர்களின் மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதன்மூலம், உதவிப் பேராசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.பெரும்பாலும் அடுத்த மாதத்தில் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற ஆணை வரும் வரை TET நடக்க வாய்ப்பு இல்லை

Pass mark 82 or 90 இறுதிமுடிவு எட்டப்பட்டாலே தேர்வு நடக்கும். தற்போதைய நிலைப்படி 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி( மதுரை தீர்ப்பு) இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் விரைவில் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. ஏற்கனவே பணிநியமனம் ஆனாலும் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றாலே இனி பணிநியமனம் நடத்தக்கூடாது என மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டதாகவே நீதித்துறையயில் எடுத்துக்கொள்ளப்படும். எனவேதான் பணிநியமனம் புதிதாக ஏதும் நடைபெறவில்லை என கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நல்லது நடந்து விரைவில் முடிவு எட்டப்பட்டால் நல்லதே.


Thanks to vijayakumar chennai
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1.50 லட்சம் அனுமதிச் சீட்டுகள் பதிவிறக்கம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக 1.50 லட்சத்துக்கும்அதிகமானோர் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துள்ளனர்.

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு சனிக்கிழமை (ஜன.10) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

தேர்வுக்காக 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதுவரை 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் உடனடியாக தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது: இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வு மையங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் முன்கூட்டியே தங்களது தேர்வு மையங்களுக்குச் சென்று முகவரியைத் தெரிந்துகொண்டால், தேர்வு நாளன்று பதற்றத்தைத் தவிர்க்கலாம்.

மாவட்ட ஆட்சியர்கள், கல்வித் துறை அதிகாரிகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். வினாத்தாள்கள், விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் தேர்வர்களின் புகைப்படங்கள், விடைத்தாள் எண், ரகசியக் குறியீடுகள் ஆகியவற்றுடன் விடைத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதன்மூலம் விடைத்தாள் விவரங்களைப் பதிவு செய்வதில் தவறுகளைக் குறைக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள், பறக்கும் படையினர், பள்ளிக் கல்வி அதிகாரிகள் என மூன்று விதமான குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பர். அதோடு, தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...