2 April 2015

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள டி.இ.டி வழக்குகள் விரைவாக முடிப்பதில் இழுபறி..

தமிழக அரசு டி.இ.டி வழக்கினை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் கடந்த விவாதத்தின் போது இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கொண்டமையால் இவ்வழக்கு வரும் 13.04.2015 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதிலும் வாதம் நடைபெற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும் கால அவகாசம் கேட்பதால் வரும் மே மாதம் நீதிமன்ற விடுமுறை என்பதாலும் இவ்வழக்குகள் மே மாதத்திற்குள் முடிவதில் சிக்கல் நீடிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையினை 2 தடவை படித்த பின்னரே இறுதிக்கட்ட விவாதம் நடைபெறும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மே மாதத்திற்குள் முடியும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் தமிழகஅரசுநினைத்தால் விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம். தமிழக அரசு முயற்சிக்குமா?

உதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., பட்டியல் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு,நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு, 2013 மே 28ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை மேற்கொண்டது. பின், 2013 நவம்பர், 25 முதல், டிசம்பர், 6ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதன்படி, மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஜாதி வாரி இட ஒதுக்கீடுப் படி, நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு பணியிடத்துக்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், தேர்வானோருக்கு, கடந்த பிப்., 25 முதல் மார்ச் 25 வரை நேர்முகத்தேர்வு நடந்தது.

இதைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற, 81 பேரின் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இப்பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. பணிக்கு இறுதியாக தேர்வானோரின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...