Posts

Showing posts from March 10, 2023
Image
  TNPSC - கால்நடை மருத்துவர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு   தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய, கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு, 731 காலியிடங்களை நிரப்ப, வரும், 15ம் தேதி; மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணியில், 33 காலியிடங்களை நிரப்ப, வரும், 14ம் தேதி, கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வுகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன. தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO காலிப்பணியிடங்கள் எத்தனை?.. வெளியான முக்கிய தகவல்..!!!! தமிழகத்தில் சென்ற 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட குரூப்-4 & VAO தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2022 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது வரை குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்த தேர்வர்கள் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 & VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இப்போது அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. முடிவுகள் வெளியாகவுள்ள இந்நிலையில் TNPSC குரூப் 4 & VAO தேர்வின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது 7,301ல் இருந்து 9,870 ஆக அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Image
  TANCET 2023: முதுகலைப் படிப்புகள்; டான்செட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி? 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத ஹால் டிக்கெட் நாளை (மார்ச் 11) வெளியாக உள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு பிப்.22ஆம் தேதிஆம் தேதி வரை நடைபெற்றது. எம்பிஏ படிப்புக்கான தேர்வை எழுத 24, 468 பேரும் எம்சிஏ படிப்புக்கான தேர்வை எழுத 9,820 பேரும் விண்ணப்பித்தனர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.  சீட்டா நுழைவுத் தேர்வு அறிமுகம் எம்இ, எம்டெக், எம்ஆர்க் எனப்படும் முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளுக்கு இதுநாள் வரை டான்செட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டில் இருந்து சீட்டா நுழைவுத் தேர்வு அறிமுகம