16 October 2022

 தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்: ராமதாஸ்



ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலத்தின் அரசுத் துறைகளில் ஒப்பந்த பணி முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது; தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநில அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும். இதன்மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் கடைபிடிப்பதற்கான முன்னுதாரணத்தை ஒடிசா உருவாக்கியுள்ளது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.


அதனடிப்படையில் ஒடிசா மாநில அரசுத் துறைகளில் 2013-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கால கட்டங்களில் தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கான அரசாணை ஞாயிற்றுக்கிழமை(அக்.16) பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒடிசா மாநில அரசுத் துறைகளிலும் இனி வரும் காலங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிகமாகவோ எவரும் பணியில் சேர்க்கப்பட மாட்டார்கள். தற்காலிக பணியாளர்கள் இல்லாமல் முழுக்க, முழுக்க நிரந்தர பணியாளர்களைக் கொண்டே ஒரு மாநில அரசு இயந்திரம் இயங்குவது பெரும் சாதனையாகும். 


அரசு ஊழியர்களை தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் நியமிப்பது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். எப்போது பணி நீக்கம் செய்யப்படுவோமோ? என்ற அச்சத்திலேயே ஓர் அரசு ஊழியர் பணி செய்வதை விட கொடுமையான மன உளைச்சல் இருக்க முடியாது. அதேபோல், நிரந்தர பணியாளர்களும், தற்காலிக பணியாளர்களும் ஒரே மாதிரியான பணிகளை செய்யும் போது, நிரந்தர பணியாளர்களுக்கு அதிக ஊதியம், தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் என்பது சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது ஆகும்.



ஆனால், இந்த மன உளைச்சலையும், சமூக அநீதியையும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தற்காலிக ஊழியர்கள் அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் நியமனத்தை பின்பற்றி வருகின்றன. தற்காலிக பணியாளர்களில் பெரும்பான்மையினர் ஆசிரியர்கள் என்பது தான் வேதனையான உண்மை.


தற்காலிக பணியாளர்களில் பலரை பணி நீக்க அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவை தீர்மானித்திருப்பதால் அவற்றின் பணியாளர்கள் பெரும் கவலையில் வாடுகின்றனர். இது தான் ஒடிசாவுக்கும், தமிழ்நாட்டிற்குமான வேறுபாடு ஆகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என அவர்கள் நம்பினர்.



அந்த நம்பிக்கை இன்னும் நிறைவேறவில்லை; அவர்களின் துயரங்களும் தீரவில்லை. தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்வது சாத்தியமற்ற ஒன்றல்ல என்பதை ஒடிசா அரசு நிரூபித்திருக்கிறது. 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதால் அம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1300 கோடி மட்டும் தான் கூடுதலாக செலவாகும். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய ரூ.2,500 கோடி வரை செலவாகக்கூடும்.


ஒரு லட்சம் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதால் ஏற்படும் சமூக நன்மைகளுடன் ஒப்பிடும் போது ரூ.2500 கோடி கூடுதல் செலவு என்பது பெரிய சுமையல்ல; அது ஆக்கப்பூர்வமான முதலீடு ஆகும். இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக பதவியேற்றவுடன் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 45,000 பேரை ஒரே ஆணையில் பணி நிலைப்பு செய்தார். 


அப்போதும் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தது; ஆனாலும் இந்த நடவடிக்கையால் அரசின் நிதிநிலைமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போதும் தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இதை மனதில் கொண்டு தமிழ்நாட்டிலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்து முதல்வர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

 போட்டித்தேர்வுகளில் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?



இன்று TNPSC தேர்விற்கு தங்களை தயார் செய்து கொண்டு இருக்கும் பெரும்பாலான சகோதர-சகோதரிகளின் பிரச்சினை கணக்கு பாடமே. நன்றாக படிப்பார்கள், நல்ல ஞாபக சக்தி இருக்கும், ஆனால் கணக்கு என்றால் பின் வாங்குவார்கள். அவர்கள் கணக்கில் இருந்து கேட்கப்படும் அந்த 25 கேள்விகளை மிகப் பெரிய தலைவலியாக உணர்வார்கள்.

போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்க வேண்டுமெனில் இந்த 25 கேள்விகளில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க வேண்டும். அதற்கு குறைந்தால் உங்கள் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கும்.


25 க்கு 24 எடுத்தால் உத்தமம்

25 க்கு 20 எடுத்தால் மத்திமம்

25 க்கு 15 எடுத்தால் மோசம்

25 க்கு 10 எடுத்தால் நாசம்


பெரும்பாலும், இரண்டு அல்லது மூன்று வினாக்கள் குறைபாட்டினால் வேலையைத் தவற விட்டவர்கள் கணக்கில் 15 முதல் 18 கேள்விகளுக்கே சரியான விடை அளித்து இருப்பார்கள்.


இந்த கணக்கினைக் கையாளுவது எப்படி?

● முதலில் நீங்கள் ஒன்றினை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், போட்டி தேர்வுக்குப் படிப்பவர்களில் அனைத்து பாடப் பகுதிகளிலும் வல்லுநர் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சிலரே உள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவர்கள் தேக்க நிலையை அடையக் கூடிய பாடப் பகுதி என்று ஒன்று உண்டு. எல்லாரும் எல்லாவற்றிலும் வல்லவர் இல்லை.


● முதலில் நீங்கள், எனக்கு கணக்கு வராது, எனக்கும் கணக்கிற்கும் நீண்ட தூரம், கணக்கில் நான் வீக் என்ற எதிர்மறை எண்ணத்தினை மனதில் இருந்து நீக்க வேண்டும்.


● ரயில்வே, வங்கி போன்ற மற்ற போட்டித் தேர்வுகளை ஒப்பிடும் போது TNPSC தேர்வில் கணக்கு என்பது மிக மிக எளிதுதான். கணக்கினை ஒரு பூதம் போல் நினைத்து நாம் விலகியே இருப்பதனால் நமக்கு கடினமாக இருப்பது போல் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறதே தவிர உண்மையில் கடினம் அல்ல.


● நாம் கணக்கில் இருந்து விலகியே இருப்பதால், சில இலகுவான விஷயங்களைக் கூட தெரிந்து கொள்ள தவறி விடுகிறோம். (உதாரணமாக சராசரி, இடைநிலை, முகடு, பகு எண், பகா எண், மீ.சி.ம, மீ.பெ.ம போன்றவை) இதன் காரணமாக சில எளிய வினாக்களைக் கூட தவற விட்டு விடுகிறோம், நான் மேலே உதாரணமாக கூறியவற்றின் விளக்கங்களைத் தேடிப் பாருங்கள், இதனையா நாம் இவ்வளவு நாள் அறியாமல் வைத்து இருந்தோம் என்று நீங்களே வருத்தப்படுவீர்கள்.


● நீங்கள் கணக்கினை படிக்கத் தொடங்கும் முன் எளிய பகுதியில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். அது உங்களுக்கு ஒரு உத்வேகத்தையும், தன்னம்பிக்கையும் கொடுக்கும். அப்படியே மெதுவாக சற்று கடினமான பகுதிகளை புரிந்து கொள்ள முற்படுங்கள்.


● TNPSC யைப் பொறுத்த வரை, ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்களின் கூடுதல் 180 டிகிரி, ஒரு முழு வட்டத்தின் கோணம் 360 டிகிரி, அரை வட்டத்தின் கோணம் 180 டிகிரி, பித்தகோரஸ் தேற்றம் போன்ற அடிப்படை கணக்கியலைத் தெரிந்து கொண்டாலே 4-8 கேள்விகள் வரை விடை அளிக்கலாம்.


● 2012 ஆண்டில் இருந்து, இது வரை கேட்கப்பட்டு உள்ள பழைய வினாத் தாள்களில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக இதன் மூலம் நீங்கள் 2-4 வினாக்கள் வரை சரியான விடை அளிக்க இயலும்.


● TNPSC தேர்வினைப் பொறுத்த வரை கொடுக்கப்பட்டுள்ள 4 விடைகளில் இருந்து பதிலைப் எடுத்து உள்ளீடு செய்து நீங்கள் தீர்வு காணலாம். இதற்கு சற்று நேரம் அதிகம் ஆகுமே தவிர உங்களால் மிகச் சரியான விடையை அளிக்க முடியும்.


● நீங்கள் கணக்கில் பலவீனமானவர் என்று கருதினால், உங்களுக்கு எது பலம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் மொழிப் பாடத்தில் வல்லவர் என்றால், எந்த விதமான கேள்விகள் கேட்டாலும் அதில் 95 கேள்விகளுக்கு சரியான விடையை என்னால் அளிக்க முடியும் என்ற அளவில் உங்கள் தயாரிப்பு இருக்க வேண்டும்.


● மனப் பாடம் செய்வதில் வல்லவர் என்றால், கணக்கினைத் தவிர மீதி அனைத்து பகுதிகளையும் (மொழிப்பாடம், அறிவியல், வரலாறு, புவியில், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியல் அமைப்பு) நன்றாகப் படித்து இருக்க வேண்டும். எந்த பகுதியையும் தவிர்த்தல் கூடாது. இதன் மூலம் கணக்கினால் ஏற்படும் இழப்புகளை ஓரளவு ஈடு செய்யலாம்.


● ஆனால், கணக்கில் மட்டுமே குறைந்த உழைப்பில் முழு மதிப்பெண்களைப் பெற முடியும் என்பதனையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கணக்கினை ஒதுக்கும் பட்சத்தில் நீங்கள் மிக மிக அதிகமாக உழைக்க வேண்டும்.


● கணக்கிற்கு விடை அளிக்கும் போது, கேள்வியை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன கேட்டு இருக்கிறீர்கள், நாம் என்ன கண்டு பிடித்து இருக்கிறோம் என்பதில் தெளிவு தேவை.


● TNPSC கணக்கினைப் பொறுத்த வரை, கேள்வியை - விடைகளை நன்கு உள் வாங்கி கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சூத்திரக் கண்ணோடு பார்க்காமல் இயல்பாக பார்க்க துவங்குங்கள். எளிதாக விடை அளிக்கலாம்.

 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு




சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.



அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான, ஆண்டு கட்டணம் ரூ.23.5 லட்சத்தில் இருந்து ரூ.24.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தினமலர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஏற்பாடு



தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ள 2 ம் நிலை காவலர் தேர்வுக்கு, தினமலர் நாளிதழும் நேஷனல் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து மதுரையில் 50 பேருக்கு 40 நாட்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளது.


பயிற்சியில் பங்கேற்க நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தி 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


தேர்வு செய்யப்பட்டவர்கள் பதிவு எண்கள்:


8401, 8467, 8544, 8705, 8801 


8403, 8471, 8604, 8719, 8803


8405, 8480, 8617, 8724, 8842


8406, 8482, 8631, 8730, 8863


8409, 8486, 8646, 8748, 8867


8410, 8521, 8648, 8749, 8874


8422, 8532, 8656, 8753, 8877


8428, 8534, 8658, 8760, 8881


8435, 8535, 8666, 8781, 8883


8464, 8538, 8701, 8788, 8897


தேர்வானவர்களுக்கு அக்.19 முதல் பயிற்சி அளிக்கப்படும் என நேஷனல் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் தெரிவித்தார்.


தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ள 2 ம் நிலை காவலர் தேர்வுக்கு, தினமலர் நாளிதழும் நேஷனல் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து மதுரையில் 50 பேருக்கு 40 நாட்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளது. 

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...