Posts

Showing posts from April 29, 2013
கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்-Dinamani இந்தியாவில் சுமார் பத்து லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் அச்சம்தெரிவிக்கின்றனர்.  கல்வி உரிமைச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் "ஆர்.டி.ஐ. பேரவை' என்றதன்னார் வ தொண்டு நிறுவனம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில் பிகாரில் அதிகபட்சமாக 50 சதவீத ஆசிரியர்களும், ஆந்திரத்தில் 44 சதவீதம், ஜார்கண்டில்37 சதவீதம், கர்நாடகத்தில் 28 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 23 சதவீதம், மேற்கு வங்கத்தில் 21 சதவீத ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.  இந்தியாவில் ஏறக்குறைய 10 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் அம்பரிஷ் ராய் கூறுகையில்,""நாட்டில் ஆசிரியர் பயிற்சிக்குச் சரியான கல்வி நிலையங்கள் இல்லை. இதனால், ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2012-ஆம் ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 7.95 லட்சம் பேர் பங்கேற்றன