19 March 2015

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்தத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பிறகு, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு இந்தப் பட்டியல் அண்மையில் அனுப்பப்பட்டது. இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்தவாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன.

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன.போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண்ஆகியவற்றின் அடிப்படையில் 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

'டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்' (பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில்)

பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், பிஎச்.டி., மற்றும் எம்.பில்., பட்டதாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) விலக்கு அளித்திருந்தது. ஆனால், கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, இந்த விதி விலக்கை நீக்கியது. இதை எதிர்த்து, பிஎச்.டி., மற்றும் எம்.பில்., பட்டதாரிகள் சார்பில், மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றின் விசாரணைக்கு பின், நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், டி.எஸ்.தாகூர், ரோஹிண் டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பென்ச் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் ஒரே சீரான, உயர்ந்த கல்வி தரத்தை கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு, யூ.ஜி.சி., அளித்த விதிவிலக்கை நீக்கியுள்ளது. இதில், தன்னிச்சையாகவோ, பாரபட்சமாகவோ மத்திய அரசு செயல்படவில்லை. மிகச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக உள்ளது. அதனால், மத்திய அரசின் விதிமுறைகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பைரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி உமா, உசிலம்பட்டி பாண்டியராஜன் உட்பட 152 பேர் தாக்கல் செய்த மனு: அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்களாக 1999 ல் பணியில் சேர்ந்தோம். 2008 ல் பணி வரன்முறை செய்யப்பட்டோம். 2013 ல் 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை அரசு பணிநீக்கம் செய்தது. இது தொடர்பான வழக்கில் எங்களில் பி.எட்.,முடித்தவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் 652 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ளது. எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் எங்களுக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் 4 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும், ஏற்கனவே இதுபோல் தாக்கலான வழக்குடன் சேர்த்து விசாரிக்கும் வகையில் பட்டியலிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மனுதாரர்களின் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.

  10000 பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? கோவி செழியனுக்கு அன்புமணி கேள்வி தமிழ்நாட்டில் உள்ள அரசு க...