Posts

Showing posts from September 1, 2019
குடியரசுத் தினம் எப்போது? இன்று நடந்த குரூப் 4 தேர்வில் 5 கேள்விகள் தவறுகள் இருந்ததாக தகவல் இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குடியரசுத் தினம் எப்போது என்ற கேள்விக்கு சரியான பதிலே வினாத்தாளில் இல்லை. இதேபோல் இன்று நடந்த குரூப் 4 தேர்வில் 5 கேள்விகள் தவறாக இருந்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்திய குரூப் 4 தேர்வில் 122 கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொருத்துக வடிவில் கேட்கப்பட்ட இந்த கேள்வியில் (டி) என்ற பதிவில் குடியரசு தினம் என்ற கேள்விக்கு சரியான பதிலே இல்லை. இந்த கேள்விக்கு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி என்பதே சரியான விடையாகும்.ஆனால் அளிக்கப்பட்ட நான்கு விடைகளில் அது இடம்பெறவில்லை. இதனால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். அதேநேரம் ஆங்கிலத்தில் 4வதாக dissolution of the 1st lok sabha என்று கேட்கப்பட்டுள்ளது. அதாவது முதலாவது லோக்சபா (மக்களவை) கலைக்கப்பட்ட தேதி. இதற்கு விடை தான் 4 ஏப்ரல் 1947 ஆகும். பதிலை சரியாக தமிழில் கொடுத்துவிட்டு கேள்வியை தவறாக கேட்டுள்ளார்கள்.
5,575 மையங்களில் இன்று குரூப்-4 தேர்வு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 16.30 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் அதிகம் பேர் விண்ணப்பிக்கும் தேர்வு இதுவாகும். 301 தாலுகா மையங்களில் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். கைபேசி, மின்னணு சாதனங்கள், கைப்பை உள்ளிட்டவை தேர்வறைக்குள் அனுமதிக்கப்படாது. புத்தகம், லாக் புத்தகம், கால்குலேட்டர், துண்டுச் சீட்டு உள்ளிட்டவையும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படாது. மீறும் நபர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. வண்ணப் பேனாக்களையோ, பென்சில்களையோ பயன்படுத்தக்கூடாது என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக தேர்வு மையத்திற்குள் இருத்தல் நலம்.