Posts

Showing posts from April 3, 2022
Image
குரூப் 4 பதவிக்கு 2 நாளில் 41 ஆயிரம் பேர் விண்ணப்பம்: இத்தேர்வுக்கு சுமார் 25 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 பதவிகள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,593(பிணையமற்றது), ஜூனியர் அசிஸ்டெண்ட் 88(பிணையம்), தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1,024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கீழ் வரும் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஆன்லைனில்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) விண்ணப்பித்தல் பணி தொடங்கியது. 'இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க
Image
  12-ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்தது புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி இருந்தன. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கணிதப் பாடத்திற்கான 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் இன்று மதியமே வெளியானது. தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த இரு வகை வினாத்தாள்களும் கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தடுத்து வினாத்தாள் கசிவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தமிழக அரசின் தேர்வு முறை மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது. 12-ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Image
  தமிழ்நாட்டில் 415 தனியார் பள்ளிகள் மூடப்படும் அபாயம்! தமிழ்நாட்டில் உள்ள 25 தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஆரம்ப அனுமதி இல்லாததால் அந்தப் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் மூடப்படும் அபாயமும், தொடக்கக்கல்வித்துறையில் தொடக்க அனுமதி பெறாத 390 நர்சரிப் பிரைமரிப் பள்ளிகளும் வரும் கல்வியாண்டில் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. பள்ளிக்கல்வித்துறையில் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுதினம் (ஏப். 5) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர். கூட்டத்தில் தொடக்க கல்வித்துறையின் சார்பில் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம், பழுதடைந்த பள்ளிகளின் எண்ணிக்கை, கட்டடங்களின் எண்ணிக்கை, நர்சரி, பிரைமரிப் பள்ளிகளின் அங்கீகாரம் பெறப்பட்ட விவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சார்பில் பள்ளி மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததாக கல்வித் தகவல் உதவி மையமான 14417 என்ற எண்ணிற்கு பெறப்பட்ட 30 மனுக்களில் 5 மன
Image
  BREAKING: 1 To 9 ஆம் வகுப்பு வரை கட்டாயம்.. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!!! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு வந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் நடப்பு ஆண்டில் கட்டாய மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தேர்வு ரத்து என நேற்று இரவு செய்தி வெளியான நிலையில் பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது. தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Image
  1 - 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு தமிழகத்தில் 1 - 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1 - 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்றும் 6-9ஆம் வகுப்புகளுக்குமே 5 முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ம் தேதி எனவும், 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image
  TN TET ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்தோர் கவனத்திற்கு. பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ.!!!! ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் குறித்த முழு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வு நடத்தி தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தகுதித் தேர்வினை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதிக் கொள்ளலாம். இந்த தேர்வு குறித்த அனைத்து விளக்கத்தையும் தற்போது தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களைக் கொண்டு உள்ளது. அதில் முதல் தாளை டிப்ளமோ ஆசிரியர்கள் எழுதிக்கொள்ளலாம். இரண்டாவது தாளை பிஎட் ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் எழுதலாம். பி.எட் படித்தவர்கள் முதல் தாளை கூட எழுதிக்கொள்ளலாம். இந்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்புடன்D.T.Ed அல்லது B.Ed படித்திருக்க வேண்டும். மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் அனைவருமே இந்த தேர