9 November 2022

 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைப் பயிற்சி.. தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்



பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் நவ.15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மாவட்டக் கல்வி அலுலவலகங்களில் அறிவியில் செய்முறைப் பயிற்சி எழுதுவதற்குப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து, அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுவராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில், '2022-23ஆம் கல்வியாண்டில் 2023 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களும், ஏற்கெனவே 2012ஆம் ஆண்டிற்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம். 


அனைத்து தனித்தேர்வர்களும் வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில், தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்றப் பின்னரே தனித்தேர்வர்கள் எழுத்துத்தேர்வு என்ற கருத்தியல் தேர்வுக்கும் அனுமதிக்கப்படுவா்.


பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பம் செய்பவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிக்குச்சென்று 80% பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் படித்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அதில் கூறியுள்ளார்.


  அரசு கல்லூரிகளில் 4,000 பேராசிரியர் பணியிடங்கள்.! தமிழக அரசு அரசாணை 



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.



இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்; 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்து தேர்வு மற்றும் பணி அனுபவத்திற்கும், மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.


எழுத்துத்தேர்வில் 200 மதிப்பெண்களும் பணி அனுபவத்திற்கு 30 மதிப்பெண்களும் என 230 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 7,918 உதவி விரிவுரையாளர் பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்பட உள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் அனுபவம் மதிப்பெண்கள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப ஓராண்டிற்கு இரண்டு மதிப்பெண்கள் விதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கும், தமிழ் மொழி பாடத் திறனுக்கான கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து தாள் இரண்டில் தொடர்புடைய பாடங்களுக்கான 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரத்திற்கு தேர்வு நடைபெறும். அதன் பின்னர் 30 மதிப்பெண்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.



 வெளியானது குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் - எத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி?



தமிழகத்தில் சுமார் பத்து லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியாகி உள்ளது.



கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வவை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து, 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


குரூப்-2 நேர்முகத் தேர்வு பதவிகளான 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 2 நன்னடத்தை அலுவலர்கள், 19 உதவி ஆய்வாளர்கள், 17 சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 8 இளநிலை வேலைவாய்ப்பு

அலுவலர்கள், ஒரு சிறப்பு உதவியாளர், 58 தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் வரும் 9 நகராட்சி பணியாளர் ஆணையர் நிலை-2 பணியிடங்கள், 291 முதுநிலை ஆய்வாளர்கள், 972 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்பட 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பை வெளியிட்டது.


அதன்படி, குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 5 ஆயிரத்து 529 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21-ம்தேதி நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூன் மாதமே வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து கால தாமதம் ஆகி வந்தன. கடந்த மாதத்தில்(அக்டோபர்) தேர்வு முடிவு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


அதற்கிடையில், சமூக வலைதளங்களில் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் தொடர்பான சில தகவல்களும் வெளியாகின. அதனைத் தொடர்ந்து மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முறையை பின்பற்ற மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த பணி நிறைவுற்ற பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. இந்த நிலையில் இதற்கான தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு வெளியிட்டது.


அந்த வகையில் முதல்நிலை தேர்வு எழுதிய 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேரில், 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...