Posts

Showing posts from May 31, 2019
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்து முடிவுகளுக்காக மாணவர்கள் காத்துக்கொண்டிக்கின்றனர். சித்தா, ஆயுர், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து ஒரு வருடம் தமிழகம் விலக்கு பெறப்பட்டிருந்த நிலையில் சென்ற வருடம் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. ஆனால், இந்தாண்டு சித்தா, யுனானி, ஆயுர்வேத படிப்புகளுக்கு எதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மாணவர்களிடையே ஒரு குழப்ப நிலை நிலவி வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விள
Image
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் அளிக்க உத்தரவிடக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருந்ததாவது: "கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் தகுதிச்சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 150 மதிப்பெண்களுக்கான தேர்வில் பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது. எஞ்சிய கேள்விகள்பொதுஅற
நீட் தற்காலிக விடை கையேடு வெளியீடு : கீ சேலஞ்சுக்கு இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம் சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக விடை கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 5ம் தேதி 155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடந்தது. பானி புயல் காரணமாக ஒடிசாவில் மே 20ம் தேதி இத்தேர்வு நடந்தது. மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில், நீட் தற்காலிக விடை கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண், பாஸ்வேர்ட் அளித்து உள்ளீடு செய்ய வேண்டும். அதில், ‘‘அப்ளை பார் கீ சேலஞ்’’ என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீட் தேர்வில் இடம்பெற்றிருந்த 180 கேள்விகள், அவற்றின் சரியான விடையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆப்சன்கள் இடம்பெற்றிருக்கும். தற்காலிக விடை கையேட்டில் தவறு இருப்பதாக கருதும் மாணவர்கள், அந்த கேள்விகளை தேர்வு செய்து அவற்றுக்கான சரியான விடையாக கருதும் ஆப்சனை தேர்வு பைனல் சப்மிட் எ
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடைகோரிய வழக்கு தள்ளுபடி : உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை: ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டெட்) தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது: கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி  இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வு  நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) நடத்தி வருகிறது.   ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் தகுதிச்சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வழிமுறைகளும் அம
ஜூன்3-ம் தேதி 10ம் வகுப்பு சிறப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு சென்னை: 10ம் வகுப்பு சிறப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாக உள்ளது. www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் வரும் 3ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தேர்வுத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.