5 December 2021

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள்.. தமிழக அரசுக்கு வேல்முருகன் முக்கிய கோரிக்கை

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு வரும் 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை, ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது

கடந்த 2017 ஆம் ஆண்டு, இதே பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அம்பலப்படுத்தியதோடு, வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23 அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது.

வேதனையளிக்கிறது

இவ்விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர், அத்தேர்வை இரத்து செய்ததுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா முடக்கம் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாத அத்தேர்வு, வரும் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வெளி மாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே ரத்தாகி, இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது.

அரசாணை

வெளி மாநிலத்தவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. தற்போது, தமிழ்நாட்டின் அனைத்து நிலை போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தடுத்து நிறுத்த வேண்டும்.

எனவே, இந்த அரசாணை வரும் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கும் பொருந்தும் வகையில் வழிவகுக்க வேண்டும் என்றும் இதற்கான அறிவிப்பாணையை தேர்வுக்கு முன்னர் வெளியிட வேண்டும். இத்தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

கர்நாடகா, உத்தரப்பிரதேசம்

கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில், மண்ணின் மக்கள் மட்டுமே அரசுத் தேர்வெழுத முடியும் என்ற நிலை உள்ளது. இதுபோன்று, தமிழ்நாட்டில் வந்தரெல்லாம் தேர்வெழுதலாம் என்ற விதியையும் மாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 6 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: 6 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: நிதியமைச்சர் பழனிவேல் அறிவிப்பு

அரசு துறைகளில், ஆறு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வருடன்ஆலோசித்து, அரசு பணியாளர் தேர்வு, பதவி உயர்வு தொடர்பாக பல முடிவுகளை எடுக்க உள்ளோம்.

ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்,'' என, தமிழக நிதி அமைச்சர்தியாகராஜன் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கையின் போது, 'தமிழ் மொழி தேர்வில் குறைந்தது, 40 சதவீத மதிப்பெண் பெற்ற வர்களுக்கு தான், அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும்' என்று அறிவிக்கப் பட்டது.இது குறித்து, பல விவாதங்கள் நடத்தி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசின் பணிஇனிமேல், தமிழக அரசு பணிக்கு, எந்த தேர்வு முகமை தேர்வை நடத்தினாலும், தமிழ் புலமை, தமிழகம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.அதில், 40 சதவீத மதிப்பெண் பெற்றதால் தான், மற்ற தேர்வு தாள்கள் திருத்தப்படும்.டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' போன்ற தேர்வுகளில், ஆங்கில மொழித்தாள் நீக்கப்படும்; தமிழ் மொழித்தாள் மட்டுமே இடம் பெறும்.இதிலும், 40 சதவீத மதிப்பெண் பெற்றால் தான், மற்ற விடைகள் திருத்தப் படும்.பத்தாம் வகுப்பு கேள்விகளில், 40 சதவீத மதிப்பெண் பெறாவிட்டால், அரசு பணிகளில் அமர முடியாது. இனி நடக்கும் தேர்வுகளுக்கு இது பொருந்தும். சரியான பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பது அரசின் பணி.தேர்வு முறையில் மாற்றம் தேவை. தமிழகத்தில் அரசு துறைகளில், 14 லட்சம் முதல் 15 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.ஆனால், ஒன்பது லட்சம் பேர் தான் பணியில் உள்ளனர்.

நிறைய இடங்கள் காலியாக உள்ளன; அவற்றை நிரப்ப போதுமான நிதி இல்லை.தமிழ் மொழித்தாள் தேர்ச்சி கட்டாயமாக்கப் பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணிக்கு செல்வது அதிகரிக்கும்.பணியாளர்களின் பணி தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழர் அல்லாதவர்கள் எவ்வளவு பேர் பணியில் உள்ளனர் என்ற புள்ளி விபரம் இல்லை. கோப்புகள் தாமதமாவதற்கும், ஊழியர்கள் வயதுக்கும் சம்பந்தம் கிடையாது. கடந்த ஆட்சியில், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை.அறிவியல் முன்னேற்றம் காரணமாக, வாழக்கூடிய வயது அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, வளர்ந்த நாடுகளில் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால், பணியாளர் காலியிடங்கள் குறைவாக உள்ளது.

நம் பங்கேற்புமுதல்வருடன் ஆலோசித்து, பணியாளர் தேர்வு, பதவி உயர்வு என பல முடிவுகளை எடுக்க உள்ளோம். ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்.பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை, மத்திய தேர்வு வாரியங்கள் நடத்திய தேர்வுகள், மண்டல அளவில் நடத்தப்பட்டன. அது தேசிய மயமான பின், நம் பங்கேற்பு மிகவும் குறைந்து விட்டது. மண்டல அளவிலான தேர்வு நடத்தப்பட்ட போது, 500 முதல் 800 பேர் ஆண்டுதோறும், மத்திய அரசு பணிகளுக்கு சென்றனர். தேசிய மயமான பின் 100 பேர் கூட செல்வதில்லை.இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.நிதியமைச்சர் பழனிவேல் அறிவிப்பு

அரசு துறைகளில், ஆறு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வருடன்ஆலோசித்து, அரசு பணியாளர் தேர்வு, பதவி உயர்வு தொடர்பாக பல முடிவுகளை எடுக்க உள்ளோம்.

ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்,'' என, தமிழக நிதி அமைச்சர்தியாகராஜன் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கையின் போது, 'தமிழ் மொழி தேர்வில் குறைந்தது, 40 சதவீத மதிப்பெண் பெற்ற வர்களுக்கு தான், அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும்' என்று அறிவிக்கப் பட்டது.இது குறித்து, பல விவாதங்கள் நடத்தி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசின் பணிஇனிமேல், தமிழக அரசு பணிக்கு, எந்த தேர்வு முகமை தேர்வை நடத்தினாலும், தமிழ் புலமை, தமிழகம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.அதில், 40 சதவீத மதிப்பெண் பெற்றதால் தான், மற்ற தேர்வு தாள்கள் திருத்தப்படும்.டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' போன்ற தேர்வுகளில், ஆங்கில மொழித்தாள் நீக்கப்படும்; தமிழ் மொழித்தாள் மட்டுமே இடம் பெறும்.இதிலும், 40 சதவீத மதிப்பெண் பெற்றால் தான், மற்ற விடைகள் திருத்தப் படும்.பத்தாம் வகுப்பு கேள்விகளில், 40 சதவீத மதிப்பெண் பெறாவிட்டால், அரசு பணிகளில் அமர முடியாது. இனி நடக்கும் தேர்வுகளுக்கு இது பொருந்தும். சரியான பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பது அரசின் பணி.தேர்வு முறையில் மாற்றம் தேவை. தமிழகத்தில் அரசு துறைகளில், 14 லட்சம் முதல் 15 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.ஆனால், ஒன்பது லட்சம் பேர் தான் பணியில் உள்ளனர்.

நிறைய இடங்கள் காலியாக உள்ளன; அவற்றை நிரப்ப போதுமான நிதி இல்லை.தமிழ் மொழித்தாள் தேர்ச்சி கட்டாயமாக்கப் பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணிக்கு செல்வது அதிகரிக்கும்.பணியாளர்களின் பணி தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழர் அல்லாதவர்கள் எவ்வளவு பேர் பணியில் உள்ளனர் என்ற புள்ளி விபரம் இல்லை. கோப்புகள் தாமதமாவதற்கும், ஊழியர்கள் வயதுக்கும் சம்பந்தம் கிடையாது. கடந்த ஆட்சியில், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை.அறிவியல் முன்னேற்றம் காரணமாக, வாழக்கூடிய வயது அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, வளர்ந்த நாடுகளில் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால், பணியாளர் காலியிடங்கள் குறைவாக உள்ளது.

நம் பங்கேற்புமுதல்வருடன் ஆலோசித்து, பணியாளர் தேர்வு, பதவி உயர்வு என பல முடிவுகளை எடுக்க உள்ளோம். ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்.பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை, மத்திய தேர்வு வாரியங்கள் நடத்திய தேர்வுகள், மண்டல அளவில் நடத்தப்பட்டன. அது தேசிய மயமான பின், நம் பங்கேற்பு மிகவும் குறைந்து விட்டது. மண்டல அளவிலான தேர்வு நடத்தப்பட்ட போது, 500 முதல் 800 பேர் ஆண்டுதோறும், மத்திய அரசு பணிகளுக்கு சென்றனர். தேசிய மயமான பின் 100 பேர் கூட செல்வதில்லை.இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...