தடை விலகுமா?
ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பணிநியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இன்று தடை விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தடை நீங்கினால் உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமனம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.மதுரை கோரட் தகவல் இன்று பதிவு செய்யப்படும்.
26 November 2014
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை
வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும்.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 1.80 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. சென்னையில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விநியோகிக்கப்படுகின்றன.
Subscribe to:
Posts (Atom)
தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...