Posts

Showing posts from September 18, 2023
Image
  குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.  ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது அல்லது வெளியாகாமல் கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  அதே சமயத்தில் இந்த ஆண்டு குரூப்- 4 தேர்வுக்கு அழைப்பு வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டுதான் அறிவிப்பு வெளியாகும் என்றும் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர். லட்சக்கணக்கான தேர்வர்கள் குரூப்- தேர்வை தான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தேர்வர்களின் கனவு நிலைக்குமா அல்லது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கலைத்துவிடுமா என்பது குறித்து நாம் காத்திருந்து தான் பார்க்