Posts

Showing posts from August 31, 2013
ஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால், அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் 2 கேள்விகளில் குழப்பங்கள் இருப்பதாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் ஒரு கேள்வியில் குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து இந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம். தமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில் தெரிவித்தார். அவர், கூறியதாவது: தமிழகம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர்மட்டுமே உள்ளார்.அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடங்களை நடத்துவதில் சிரமம் உள்ளது. இதனால், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில், போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழுக்கு பின், இடைநிலை ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட, மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முறையை ரத்துசெய்ய வேண்டும்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்
கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் விரைவில் வெளியாகிறது அறிவிப்பு கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளது. காலியாக உள்ள, 652 பணியிடங்களை, இரு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு, தேவையான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பட்டதாரிகளை, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பழைய காலி பணியிடங்களுடன்,கூடுதலாக தேவைப்படும்இடங்களுக்கும் சேர்த்து, கம்ப்யூட்டர்ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த டி.ஆர்.பி.,யின்அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பணியிடத்திற்கு,ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.