Posts

Showing posts from September 12, 2013
டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைனில், நிரந்தர பதிவாளர்களுக்கான விவரங்கள் இல்லாததால், விண்ணப்பதாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நட்ராஜ் இருந்த போது, பல வகை குரூப் தேர்வுகளை, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் ஒரு வசதியாக, "நிரந்தரப் பதிவு' முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறப்பு கட்டணம்: இதன்படி, ஒரு விண்ணப்பதாரர், நிரந்தரப் பதிவிற்கான சிறப்புக் கட்டணம் ஒரு முறை செலுத்தினால், அந்த விண்ணப்பதாரரின் பெயர், விவரம், முகவரி உட்பட அனைத்து விவரங்களும், ஐந்து ஆண்டுகள் வரை சேமித்து வைக்கப்படும். விண்ணப்பதாரர், ஐந்து ஆண்டுகள் வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தாமல், இத்தேர்வில் பங்கேற்க முடியும்.  அவர்களுக்கானபதிவு எண் மற்றும் பாஸ்வேர்டு தனியாக வழங்கப்படும். நிரந்தர பதிவுதாரர்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக, ஐந்து ஆண்டுகள் வரை, குரூப் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கும்போது, பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு, நேரடியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதற்கென புகைப்படம், சான்றுகள் என, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க தேவையில்லை. கூ
புது மந்திரிக்கு நாளை "பாலபாடம்': ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம் பள்ளி கல்வி துறைக்கு, ஐந்தாவது அமைச்சராக, கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள பழனியப்பனுக்கு, நாளை (13ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, துறை அதிகாரிகள், "பாலபாடம்' நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளில், அதிகாரிகள், தீவிரமாக தயாராகி வருகின்றனர். எந்த துறைகளுக்கும் இல்லாத அளவிற்கு, பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில், பள்ளி கல்வித்துறைக்குத் தான் அதிகம். 17 ஆயிரம் கோடி ரூபாய்! அதேபோல், அதிக அமைச்சர்களை பார்த்த துறையிலும், பள்ளி கல்வித்துறைக்குத் தான் முதலிடம்.  எதற்கும் சளைக்காத அளவிற்கு, சர்ச்சைகளும், பிரச்னைகளும், இந்த துறையில் தான் அதிகம். சி.வி.சண்முகம், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன் ஆகிய, நால்வரைத் தொடர்ந்து, உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், பள்ளி கல்வித்துறைக்கு, ஐந்தாவது அமைச்சராக, கூடுதல் பதவியை ஏற்றுள்ளார்.  கடந்த, 5ம் தேதி, வைகை செல்வன் நீக்கப்பட்டு, பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பு தரப்பட்டது. அமைச்சர்கள் வருவதும், போவதுமாக இருப்பதால், துறையில் முக்கியப் பணிகள், முடங்கிப்போய் உள்ளன.  டி.பி.ஐ., வள