Posts

Showing posts from July 23, 2013
தபால் மூலம் எம்.பில்., பிஎச்.டி.,: அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி சென்னை:"தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை,கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமிக்கத் தகுதியில்லை" என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வேலூர், ஊரிஸ் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவரும், வழக்கறிஞருமான, இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, 2009ம் ஆண்டு, உயர் கல்வித் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், "தபால் அல்லது தொலைதூர கல்வி அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள், அரசு நியமனங்களுக்கோ, சுயநிதி கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமனம் பெறவோ தகுதியில்லை" என, கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை, தன்னிச்சையானது; யு.ஜி.சி.,விதிமுறைகளுக்கு எதிரானது. கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம், யு.ஜி.சி.,க்குதான் உள்ளது. தபால் மற்றும் தொலைதூர கல்வி மூலம் வழங்கப்படும் படிப
ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள் சென்னை: தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களேஉள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலைவெளியிட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த சர்வே(2012-13) தெரிவிக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் பின்வருமாறு; தமிழகத்திலுள்ள 16 பள்ளிகளில், சுத்தமாக, ஆசிரியர்களே இல்லை. அத்தகையப் பள்ளிகள், விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இதைத்தவிர, மாநிலத்தின் 2,253 பள்ளிகளில், ஒரே ஒரே ஆசிரியர்தான் உள்ளார். இதுபோன்ற பள்ளிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் உள்ளன. அம்மாவட்டத்தின் 195 பள்ளிகளில் இந்த நிலை. மற்றபடி, ஒற்றை ஆசிரியர் பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 159ம், சிவகங்கை மாவட்டத்தில் 134ம், வேலூர் மாவட்டத்தில் 127ம், விழுப்புரம் மாவட்டத்தில் 113ம் மற்றும் தர்மபுரிமாவட்டத்தில் 131ம் உள்ளன. இதில், ஒரு பெரிய கொடுமை என்னவெனில், மேல்நிலைப் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் 765 மாணவர்
ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறை வேண்டும்கருணாநிதி அறிக்கை ஆசிரியர் தகுதி தேர்வில் அனைவருமே 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது கேள்வி:- சான்று சரிபார்ப்பு ஏற்கனவே முடித்தவர்கள் டி.இ.டி. தேர்வு (தகுதித்தேர்வு) எழுத தேவையில்லை என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப்போவதாக செய்தி வந்திருக்கிறதே? பதில்:- 2010-ம் ஆண்டு மே மாதத்திலேயே சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லாமல், பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரி, 70 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மா
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள்"கீ-ஆன்சர்' வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு| பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல்மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது. "முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்."கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள்,நேற்று தெரிவித்தன . அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேற்று முன்தினம், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், தமிழ்ப் பாட தேர்வர்களுக்கு தரப்பட்ட கேள்வித்தாளில், பல்வேறு கேள்விகளில், எழுத்துப் பிழைகள் இருந்தன.  மேலும், வணிகவியல் பாட கேள்வித்தாளில், ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வியில், பிழை
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு;நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமைநீதிபதி உத்தரவு. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ளஆசிரியர்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் 2012ல் W.P.(MD).NO.3802/2012 திரு.ஏங்கல்ஸ் அவர்களால்தொடரப்பட்ட வழக்குஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார்அகர்வால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான நிதித்துறை செயலாளர்,தொடக்கக் கல்வி இயக்குநர், திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 01.08.2013 & 02.08.2013 அன்று நடைபெறுகிறது தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களை சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுக் கூட்டம் ஜூலை 25 மற்றும் 26ஆகிய நாட்களில் நடைபெறவிருந்தது, தற்பொழுது ஆகஸ்டு 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அரசின் விலையில்லா திட்டங்கள், மாணவ / மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள இருப்பிட, சாதி, வருமான சான்றிதழ் விவரங்கள், சிறப்பு ஊக்க தொகை, வங்கி கணக்கு துவக்கிய விவரம், தொழிற்கல்வி பிரிவு பயின்ற மாணவ / மாணவியருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கிய விவரம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தவர்கள் மாறும் சேராதவர்கள் விவரம், மாவட்ட