14 October 2022

 எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்... ரூ.5,000 ஊதியம்...



தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தன. திமுக ஆட்சி அமைந்த உடன் அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வந்த எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


நடப்பு கல்வி ஆண்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம் என பள்ளி கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது . இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியது.


எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு கற்பித்த தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால் அந்த மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகியது. இந்த நிலையில் 2,831 அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் தற்காலிகமாக நியமிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டார்.



எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை கையாள இல்லம் தேடி கல்வி சட்டத்தில் பணிபுரியும் தொடக்க கல்வி பட்டைய பயிற்சி தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மை குழுவை தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்க வேண்டும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத பொழுது தொடக்க கல்வி பட்டைய படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்ய வேண்டும்


இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது எனவும் பிழைப்பூதியமாக 5,000 பள்ளி மேலாண்மை குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம். தற்காலிக ஆசிரியர்கள் காலை 9:30 மணி முதல் 12 30 மணி வரை பணி செய்ய வேண்டும். ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஒரு கல்வியாண்டில் 11 மாதங்கள் மட்டுமே வேலை நாட்கள். பள்ளியின் கடைசி வேலை நாள் என்று பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

 டிஎன்பிஎஸ்சி புது காலியிடங்கள் அறிவிப்பு




தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.



இந்த பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு நவம்பர் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


பணியிடங்கள் பற்றிய விவரங்கள் :

பதவியின் பெயர் மீன்துறை சார் ஆய்வாளர்

பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீட்டு எண் தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணி

காலிப்பணியிட எண்ணிக்கை:24

சம்பள ஏற்ற முறை ரூ. 35,900 -

ரூ. 1,13,500



மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு முக்கியமான நாட்கள்:


அறிவிக்கை நாள்: 13.10.2022


இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 11.11.2022


கணினி வழித்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:-



தாள் -1


(200 வினாக்கள்)


கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்று


1. மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவல் (பட்டயப்படிப்புத் தரம்)


2. விலங்கியியல் (பட்டயப்படிப்புத் தரம்) 07.02.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை.



தாள் -2 பகுதி -அ


கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்) அல்லது பொது ஆங்கிலம் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு கோரும் நபர்கள் )


பகுதி -ஆ பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) 07.02.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை



தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தாள்-I மற்றும் தாள்-II-பகுதி 'ஆ' வின் வினாத்தாட்கள் மதிப்பீடு செய்யப்படாது.


வயதுத் தகுதி :


மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.


கல்வித்தகுதி : மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகமானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.



Educational Qualification





தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மீன்வளத் தொழில்நுட்பம் மற்றும் வழிகாணும் பாடநெறியில் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்


(அல்லது)


விலங்கியியல் பாடங்களை முதன்மையாக கொண்ட அறிவியல் பாடநெறியால் பட்டம் பெற்றிருக்க வேண்டும்


(அல்லது)


மீன்வள அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


(i) Must possess a diploma in Fisheries Technology and Navigation

awarded by the State Board of Technical Education and Training, Tamil Nadu.

(or)


(ii) Must possess a Science Degree with Zoology as main subject.

(or)


(iii) Must possess a Degree of Bachelor of Fisheries Science



கட்டணம் :


பதிவுக் கட்டணம் : ரூ.150/-


தேர்வுக் கட்டணம் : ரூ 200/


 


விண்ணப்பம் சமர்பிப்பதற்கான இறுதி நாள் :


இணையவழி விண்ணப்பத்தை 11.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.


 தமிழக ரேஷன் கடை காலிப் பணியிடங்கள் 



கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்

விழுப்புரம் – 244 பணியிடங்கள்

விருதுநகர் – 164 பணியிடங்கள்

புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்

நாமக்கல் – 200 பணியிடங்கள்

செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்

ஈரோடு – 243 பணியிடங்கள்

திருச்சி – 231 பணியிடங்கள்

மதுரை – 164 பணியிடங்கள்

ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்

திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்

அரியலூர் – 75 பணியிடங்கள்

தென்காசி – 83 பணியிடங்கள்

திருநெல்வேலி – 98 பணியிடங்கள்

சேலம் – 276 பணியிடங்கள்

கரூர் – 90 பணியிடங்கள்

தேனி – 85 பணியிடங்கள்

சிவகங்கை – 103 பணியிடங்கள்

தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்

ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்

பெரம்பலூர் – 58 பணியிடங்கள்

கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்

திருவாரூர் – 182 பணியிடங்கள்

வேலூர் – 168 பணியிடங்கள்

மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்

திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்

கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்

திருப்பூர் – 240


விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022


 டி.என்.பி.எஸ்.சி.,யின் 4 வகை தேர்வு முடிவுகள் அறிவிப்பு




டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:


டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.



*கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவியில், எட்டு காலியிடங்களுக்கு இந்த ஆண்டு, ஏப்., 30ல் தேர்வு நடத்தப்பட்டது. 


தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கிறது


* நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 11ல் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது


*தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியில், 16 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் 31ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது


* தமிழக சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று துவக்கம்




தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிவதற்கான, 'டெட்' என்ற தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது.


முதல் தாள் தேர்வு, இன்று முதல் 20ம் தேதி வரை, கணினி வழியில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்படுகிறது. தினமும், 32 ஆயிரம் பேர் வீதம், 300க்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கிறது.


இதற்காக, தனியார் பள்ளி, இன்ஜினியரிங், கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள கணினி வகுப்புகள், தேர்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. காலை, பிற்பகல் என, இரண்டு பிரிவுகளாக தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முறைகேடு இன்றி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம், பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.



TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...