14 December 2022

 TNPSC : 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!




காலியாக உள்ள 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


வரும் ஜனவரி 13ஆம் தேதி வரைப் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முதல் நிலை தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி தமிழகத்தில் சென்னை,கோவை,திருச்சி,சேலம்,மதுரை உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறுகிறது


முதன்மை தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது


முதல் நிலை தேர்வில் தமிழ் மொழி பிரிவில் 40 மதிப்பெண்கள் தகுதி பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, பணியிடங்களுக்கு தேர்வர்கள் இன்று (14.12.2022) முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 9ஆம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


 அந்தந்த மாவட்டங்களிலேயே டெட் தேர்வு சான்றிதழ் உண்மை தன்மை சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு



டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழின் உண்மைத்தன்மையை அந்தந்த மாவட்டங் களிலேயே சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.



இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், டெட் தேர்வர்கள் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த மாவட்டங்களிலேயே சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


சுற்றறிக்கை: இதுகுறித்து ஆசிரியர் தேர்வுவாரியம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2012-ம் ஆண்டு நடந்தடெட் தேர்வில் பங்கேற்றவர்களின் விவரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன. 


சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கோரும் கருத்துருக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் டெட் தேர்வு எழுதிய நபர்களின் விவரங்களுடன் சரிபார்த்து அதை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், சான்றுகளின் உண்மைத் தன்மை கோரி கருத்துருக்கள் தேர்வு வாரியத்துக்கு வருகின்றன.


4 ஆண்டு 'டெட்' தேர்வு விவரம்: இதையடுத்து டெட் தேர்வுஎழுதியவர்களின் விவரங்கள் மீண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, 2012, 2013, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெட் தேர்வுகளுக்கான சான்றிதழ் திருத்தங்கள், உண்மைத் தன்மை அறிதல் ஆகியவை அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.


 இதுசார்ந்த எந்த கருத்துருவையும் தேர்வு வாரியத்துக்கு அனுப்பக் கூடாது. இதுதொடர்பாக மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 அண்ணா பல்கலையில் 23 தமிழ் ஆசிரியர் பணி.. தகுதிகள் என்ன?



அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 23 தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் பாடங்களைக் கற்பிக்கத் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் 17 உறுப்பு கல்லூரிகள் என மொத்தம் 23 தமிழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இளநிலை தமிழ் மற்றும் முதுகலை தமிழ் பாடத்தில் 55 சதவிகித மதிப்பெண்கள் மற்றும் பி.எச்.டி, முடித்தவர்கள் இளநிலை மற்றும் முதுகலை தமிழ் பாடத்துடன் நெட்(NET(, ஸ்லெட்(SLET), செட்(SET) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலையில் தமிழ் ஆசிரியர் பணிக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 25 ஆயிரம் ஊதியத்தில் 23 பேர் நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களின் நகல்களோடு நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து PDF வடிவத்தில் மின்னஞ்சல் மூலமாக டிச.20ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.


dirtamildvt@annauniv.edu என்கிற இணையதள முகவரியிலும், நேரடியாக விண்ணப்பங்களை முனைவர் உமா மகேஸ்வரி, பொறியியல் தொழில்நுட்ப தமிழ்வளர்சி மையம், cpde building, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி -6000 25 என்கிற முகவரியில் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 044 22358592/93 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...