Posts

Showing posts from June 25, 2023
Image
  ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு - கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி சென்னையில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று சந்தித்து, அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஜ வளாகத்தில் ஆசிரியர் சங்கங்களை அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த 22-ம் தேதி, முதல் கட்டமாகச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.  இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் சங்கங்கள், அரசு தேர்வுகள் இயக்கக சங்கங்கள், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும சங்கங்கள், நூலகர்கள் சங்கங்கள், தனியார் பள்ளிகள் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை நேற்று சந்தித் தார். அப்போது அமைச்சரிடம், சம வேலைக்கு, சம ஊதியம் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்துதல், மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துதல், மாணவர்களுக்கான இலவச உபகரணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்க வழிவகை செய்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்க
Image
  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வருகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில் இதுதான் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்வு நடைமுறையில் மாற்றம் இருக்குமா? தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தபட்டு வருகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்த முறை கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டு 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு 11ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12 ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இதையும் கருத்தில் கொண்டே 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.   இந்த நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து பழைய முறையை கொண்டு வர வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம்
Image
  பொறியியல் தரவரிசை பட்டியல்: நாளை வெளியீடு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 26) வெளியிடப்படவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன.  இதற்கான 2023-2024-ஆம் கல்வியாண்டு மாணவா் சோக்கை விண்ணப்பப் பதிவு மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. பொறியியல் கல்லூரிகளில் சேர மொத்தம், 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 போ விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் கடந்த 20-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 26) வெளியாகிறது.  மாணவா்கள், தரவரிசை பட்டியலைஇணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தரவரிசை பட்டியல் வெளியான பிறகு, தரவரிசை தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டு