Posts

Showing posts from April 9, 2023
Image
  CUTE UG 2023 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. வெளியான முக்கிய தகவல்.!!!!! National Testing Agency எனப்படும் NTA ஆனது மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் undergraduate பிரிவில் சேர்வதற்கான நுழைவு தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முன்னதாக CUTE (UG) -2023 காண பதிவானது மார்ச் முப்பதாம் தேதி 2023 உடன் முடிவடைந்தது. இப்படி விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்துவதற்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை 3-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் பலரால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க போக முடியாமல் போன காரணத்தினால் அதற்கான கால அவகாசம் வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன் வைத்தனர்.  அதனால் ஏப்ரல் 9 முதல் 11 வரையிலும் மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் பதினோராம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது
Image
  TNPSC: குரூப்-4 தட்டச்சர் தேர்வில் முறைகேடா? - மீண்டும் புதிய சர்ச்சை! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு தென்காசி மாவட்டத்தில் மட்டும் 600 பேர் தேர்ச்சி பெற்றது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து குருப் 4 தேர்வுகள் குறித்து தேர்வர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குரூப் 4 பதவியில் அடங்கிய சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் பணியிடத்திற்கான 2,500 காலி பணியிடங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து 450 பேர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.  மேலும் தென்காசி மாவட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து மொத்தம் 600 பேர்
Image
  தவறான விடைகளுக்கு மதிப்பெண்! ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்! ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், சரியான விடைகளின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்து முடிவை வெளியிட வேண்டும் என்று, பா.ம.க.நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை மதிப்பீடு செய்ததில் பெருமளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.  சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காமல், தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் வாழ்க்கையுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் விளையாடியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.   தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் இரண்டாம் தாள் முடிவுகள் கடந்த மார்ச் 28-ஆம் நாள் வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 2.54 லட்சம் பேரில், வெறும் 6 விழுக்காட்டினர், அதாவது 15,406 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.  கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைந்த எண