Posts

Showing posts from August 8, 2014
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.  இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.  அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம்
மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி :ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) செயலாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்-மதுரை ஐகோர்ட் கிளை கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டு, அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) செயலாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.  மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை ஜோசப் தாக்கல் செய்த மனு: அரசுக் கல்லூரிகளில் அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர்கள்பணி நியமன தேர்விற்கு, 2009 பிப்.,23 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு வெளியிட்டது. அதில், 'பொதுப்பிரிவில் 2, பிற்பட்டோர் 1, மிகவும் பிற்பட்டோர் 1, ஆதிதிராவிடர்களுக்கு 1 இடம் ஒதுக்கப்படும். பொதுப்பிரிவில் 2 இடங்களில், பெண்களுக்கு 1 இடம் ஒதுக்கப்படும்,' என குறிப்பிடப்பட்டது.  பொதுப்பிரிவைச் சேர்ந்த நான், அதிகபட்சமாக 36 மதிப்பெண் பெற்றதாக டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால்,பொதுப்பிரிவில் 5 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு பணி நியமனம் வழங்
TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT'sவழக்கு ஒத்திவைப்பு. ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் எனஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகூறினார்.   இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது.  இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை.  பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.  இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நி