Posts

Showing posts from July 22, 2014
ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்?  TRB சொல்வது:  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த 3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார். ஆசிரியர்தேர்வு வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த காலத்தில் தெரிவு பணியை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதுவரை தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  பட்டதாரி ஆசிரியர் : 13777 (10726)  முதுகலை ஆசிரியர் : 2881  இடைநிலை '' : 938  சிறப்பாசிரியர் : 842  TOTAL : 18,438. 1 9643- 18438 = 1205 ஆகவே மீதமுள்ள 1205 காலிபணியிடம யாருக்கு? இவை அனைத்தும் 2012-13 காலிப்பணியிடம் ஆகும். (மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பள்ளிகல்வி கொள்கை விளக்க குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டது)  அமைச்சர் சொன்னது: ஆனால் அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது 3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்கள் முதலமைச்சர் அனுமதித்தாக கூறியுள்ளார்..மேலும் இதன் தொடர்ச்சியாக 2014-15 ஆண்டுகளில் 3459 பணியிடங்கள் நிரப்ப்ப்படு
ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். - மீனாட்சி சுந்தரம் கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புதுஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அடையவைத்துள்ளது.   தொடக்கத்தில் 55ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதைத் தொடர்ந்து வந்த 5 அமைச்சர்கள்,ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி விவரங்களை அறிவித்தனர்.  இப்போது 6வதாக வந்துள்ள அமைச்சர் வீரமணி, கடந்த 3ஆண்டில் 51000 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். ஆனால் பேரவையில் அறிவித்தது வேறு. எனவே ஆசிரியர் நியமனங்கள், நிலைவாரியாக, நிர்வாகவாரியாக மாவட்டவாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்
ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு.  பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான இளங்கலை பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்கள் மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவார்கள். அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதியை தமிழ்வழி அல்லது ஆங்கில வழிஎந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை. பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருக் கிறார்களா என்பது மட்டும் இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டு இட
கிடப்பில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்புகள் - தினமலர்  குரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர். 2014-15ம் ஆண்டு குரூப் 4 தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகி, அக்.,19ல் தேர்வு நடக்கும் என்றும் ஆண்டு திட்டமிடலில் அறிவிக்கப்பட்டது.  ஆனால், தற்போது ஜூலை 3வது வாரம் கடந்த நிலையிலும் அதற்கான முறையான அறிவிப்பு வெளிவரவில்லை. கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதால், குறைந்தது 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல், குரூப் 7 (நிர்வாக அதிகாரி) மற்றும் குரூப் 8 தேர்வுகள் மே மற்றும் ஜூனில் அறிவிக்கப்பட்டு, முறையே ஆக.,2, செப்.,14ல் தேர்வு நடக்கும் என்றும் ஆண்டு திட்டமிடலில் அறிவிக்கப்பட்டது.ஆனால், இந்த தேர்வுகளுக்குமான முறையான அறிவிப்பும் வெளிவரவில்லை. அறிவிப்புகள் வெளியாகி செயல்படுத்த முடியாமல் தவிக்கும் டி.என்.பி.எஸ்.சி.,யால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்  சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது. உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகள