Posts

Showing posts from July 25, 2022
Image
  பள்ளியில் எது நடந்தாலும் தலைமை ஆசிரியரே பொறுப்பு! பள்ளிக்கல்வித் துறை! கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு என பள்ளிகல்வித்துறை கூறியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை கூறுகையில் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே வர வேண்டும். பள்ளியில் மாணவர்களின் சண்டை பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Image
  இனி ஒரு மணி நேரம் முன்னதாக ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.! ஆசிரியர்கள், பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் ,முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னஞ்சலை திறந்து பார்க்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணிக்கப்பட்டு , படித்து பார்த்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர் பள்ளி வளாகம் கழிப்பறை மற்றும் வகுப்பறை ஆகியன தூய்மையாக உள்ளதா என்பதை சரி பார்த்து அதனை பராமரிக்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்
Image
  குரூப் 4 தேர்வு : 18.50 லட்சம் பேர் எழுதினா்: வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வை 18.50 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினா். வினாக்கள் எளிதாக இருந்ததாக தோவா்கள் தெரிவித்தனா். குரூப் 4 தேர்வு அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 274 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 50 வரித் தண்டலா், 2,108 தட்டச்சா் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சா் பணியிடங்கள், ஒரு பண்டகக் காப்பாளா் என 7 ஆயிரத்து 138 காலிப் பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 7 ஆயிரத்து 301 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெற்றது. 18.50 லட்சம் பேர்: 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தனா். குரூப் 4 தேர்வுகளில் அதிகம் போ விண்ணப்பித்த தோவு இதுவாகும். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோவு நடைபெற்றது. தமிழ் மொழியிலிருந்து 100 வினாக்கள், பொது அறிவு, அறிவுக்கூா்மை தொடா்பான பிரிவுகளில் இருந்து 100 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.