17 May 2022

 டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு; வெளியான புதிய தகவல் - தேர்வு முடிவுகள் எப்போது?




குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத்தேர்வு (Preliminary exam) ஜனவரி 3ஆம் தேதி, 2021ஆண்டில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய இந்த தேர்வில் ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம்பேரின் பதிவு எண்களை இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது.


இதன் ஒரு பகுதியாக, கடந்த மே 04ஆம் தேதி 2022, இந்த முதன்மைத்தேர்வினை சென்னையில் அமைக்கப்பட்ட 37 மையங்களில் 3687 பேர் எழுதினர். இந்த குரூப் 1 தேர்வின் முதன்மைத்தேர்வு(Mains Examination)க்கான விடைத்தாள்கள் திருத்துவதில் 90 சதவீதம் பணிகள் முடித்துள்ளது என்றும்; இந்த மாதம் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஸ்சியின் தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் குரூப் 1 தேர்வு குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ‌


அதன்படி, இத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வுக்குப் பின், நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும். இதன் தொடர்ச்சியாக தகுதி உடையவர்களுக்கு துணை ஆட்சியர், டி.எஸ்.பி., உள்ளிட்ட காலியாக உள்ள 66 இடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 தேர்வே இல்லாமல் 38,926 பேருக்கு வேலை: தபால் துறை பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?



India post recruitment 2022 for 38926 GDS posts how to apply details here: இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். எனவே இந்தப் பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்போது பார்ப்போம்.


இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கிராம தபால் சேவை


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 38,926


தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை - 4,310


கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம் : கிராம தபால் ஊழியர் (BPM) - ரூ.12,000


உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) - ரூ.10,000


தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022


விண்ணப்பிப்பது எப்படி?


கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில், இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும் - indiapostgdsonline.gov.in


பின்னர் எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இணையதளத்தின் மேலே, பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் போன்ற சில இணைப்புகளைக் காணலாம்.


விண்ணப்பதாரர்கள் முதல் முறையாக விண்ணப்பிப்பவராக இருந்தால், பதிவு படிவத்தில் அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில், இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும் - indiapostgdsonline.gov.in


பின்னர் எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.


இணையதளத்தின் மேலே, பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் போன்ற சில இணைப்புகளைக் காணலாம்.


விண்ணப்பதாரர்கள் முதல் முறையாக விண்ணப்பிப்பவராக இருந்தால், பதிவு படிவத்தில் அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஒருமுறை பதிவு கட்டாயம். ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதிவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவை முடித்த பிறகு, பதிவு எண்ணைக் குறித்து வைத்து, மேலும் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.


விண்ணப்பதாரர் அவர்களின் பதிவு எண் அல்லது கட்டண ஐடியை மறந்துவிட்டால் அல்லது அவர்களின் மொபைல் எண்ணை மாற்ற அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆக பதிவு செய்ய இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அதன் மூலம் விவரங்களை மீட்டெடுக்கலாம்.


பதிவுசெய்த பிறகு, விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பைக் கிளிக் செய்து, பின்னர் பதிவு எண்ணை உள்ளிட்டு அதைச் சமர்ப்பிக்க வேண்டும்.


முழுமையான விண்ணப்பப் படிவம் திரையில் கிடைக்கும்.


முகவரி, கல்வி தொடர்பான விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் போன்ற சரியான விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்.


பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றி இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.


அடுத்ததாக மிக முக்கியமாக, நீங்கள் வேலைபார்க்க விரும்பும் கிராம அஞ்சல் அலுவலகங்களின் முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்களுக்கு மட்டுமே நீங்கள் போட்டியிட முடியும்.


இறுதியாக, விண்ணப்பப் படிவத்தை அடுத்தடுத்த தேவைகளுக்கு பயன்படுத்த அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.


விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 ஐடிஐ முடித்தவர்களுக்கு 10,12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு





ITI முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள ITI-களில் படித்து விட்டு, மேற்படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலையில், ITI-களில் படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ம்

வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.


அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, 8-ம் வகுப்புக்குப் பின் ITI-களில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு

இணையான சான்றிதழும், 10-ம் வகுப்புக்கு பின் ITI சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


ITI பயிலும் மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் வகையிலேயே இணை சான்று

வழங்கப்படுவதாகவும், இது அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது இதர வேலைவாய்ப்புக்கோ

பொருந்தாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 21-ம் தேதி TNPSC Group 2: எந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள்? பாலச்சந்திரன் பேட்டி




TNPSC chairman Balachandran explains group 2 exam question paper: வருகின்ற மே 21 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில், எந்ததெந்த பாடங்களில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.


அந்த விவரங்களை இப்போது பார்ப்போம்.


குரூப் 2 தேர்வு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெறும். 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வுக் கூட அறைக்கு வர வேண்டும். 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 11,78,175 பேர் குரூப் 2 தேர்வை எழுத உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது.


தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண்கள் 300. தமிழ் அல்லது ஆங்கிலப் பகுதியிலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். கணிதப் பகுதியிலிருந்து 25 வினாக்கள் இடம்பெறும். இந்த 200 வினாக்களும் 10 ஆம் வகுப்பு தரத்தில் இருக்கும்.


குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வுக்கு முதல்நிலைத் தேர்விலிருந்து 1:10 என்ற அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 டிஎன்பிஎஸ்சி தேர்வில் பயோமெட்ரிக் முறை..! தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!





டிஎன்பிஎஸ்சி தேர்வில் பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் மையத்திற்கு வர வேண்டும். 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். 3ஆம் பாலினத்தவர்கள் 48 பேரும், தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.


கோப்புப் படம்


அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மேலும், தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள், 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


 குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

 RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு... அறிவித்தது மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்!!




தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் நிறைவடையும் நிலையில் மே.25 வரை அவகாசத்தை நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதிவரை பெறப்படவுள்ளது. https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 


மேலும் இதற்கு, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதவிவேற்றம் செய்ய வேண்டும்.


நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் மே 23 ஆம் தேதியன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயதிலான குழந்தைகளின் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் விதமாக 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டத்தை இயற்றியது. 


இந்த சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் 25 சதவீத இடங்களை குழந்தைகளின் இலவச கல்விக்காக ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கிறது. இச்சட்டத்தின்படி ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் இலவசமாக சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.


அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் நாளையுடன் (மே 18 ஆம் தேதி) முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% சேர்க்கைக்கு மே 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் அவகாசத்தை மேலும் நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

 குரூப் 4 தேர்வு: மே 24-இல் இலவச பயிற்சி





சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மே 24-இல் நடைபெற உள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 நிலையிலுள்ள இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரித்தண்டலா், நில அளவையாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பதவிகளுக்கான இலவச


நேரடி பயிற்சி வகுப்பு மே 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.


தகுதியுள்ள போட்டியாளா்கள் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 044 24615160 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மொத்தம்‌ 10,402 பணியிடங்கள். சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ மூலம் நிரப்பப்படும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..




ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பின்னடைவுப்‌ பணியிடங்கள்‌ சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..


தமிழக அரசின் முதன்மை செயலாளர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் " 2021-2022-ஆம்‌ ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில்‌ ஆளுநர்‌ உரையில்‌, அரசுத்துறைகளில்‌ காணப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பின்னடைவுப்‌ பணியிடங்கள்‌ சிறப்பு ஆட்‌சேர்ப்பு முகாம்‌ (Special Recruitment Drive) மூலம்‌ நிரப்பப்படும்‌ என்ற அறிவிக்கப்பட்டது.


இந்த அறிவிப்பினை செயல்படுத்த, தலைமைச்‌ செயலக துறைகளிடமிருந்து

தொகுதிவாரியாக (Groupwise) உறுதிசெய்யப்பட்டு பெறப்பட்‌ட எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌, ஆதிதிராவிடருக்கு 8173 இடங்களும்‌ பழங்குடியினருக்கு 2229 இடங்களும்‌ ஆக மொத்தம்‌ 10402 கண்டறியப்பட்ட குறைவுப்‌ பணியிடங்களை (Shortfall) தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டம்‌ மற்றும் 2016 பிரிவு 27ன் படியும், உரிய வழிமுறைகளைப்‌ பின்பற்றியும்‌ தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளால்‌, தெரிவு முகமைகள்‌ மூலமாக நிரப்ப வேண்டும்‌ என ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை ஆணையிட்டுள்ளது.." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

காலியாக உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் வட்டார கல்வி அலுவலர் நியமனம்: 3 சதவீத ஒதுக்கீட்டில் விவரம் சேகரிப்பு



தமிழகத்தில் காலியாக உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 3 சதவீத ஒதுக்கீட்டில் பிஇஓக்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்கான விவரம் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அரசுப் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக தலைமை ஆசிரியர் பணியிடங்களில், 3 சதவீதம் வட்டார கல்வி அலுவலர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாநிலம் முழுவதும் தகுதிவாய்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் விவரம் சேகரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தமிழகத்தில் காலியாக உள்ள 700க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் நியமனம் நடக்கிறது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 3 சதவீத இடங்களுக்கு வட்டார கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பதால், கடந்த ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, தகுதிவாய்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


குறிப்பாக, கடந்த 31.12.2006க்கு முன்னர் பணியில் சேர்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து, வரும் 20ம் தேதிக்குள் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,''என்றனர்.

 மத்திய அரசில் 2065 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை இது தான்! தகுதியானவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!




மத்திய அரசில் காலியாக உள்ள 2065 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்( staff selection Commission) மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் தேர்வு தேதி வெளியாகும். அதேப்போன்று இந்தாண்டும் சுமார் 2065 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12 மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்ளலாம்.


கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே கூடுதல் தகுதி தேவைப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://ssc.nic.in/Portal/Apply என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் - பொதுப்பிரிவினருக்கு ரூ. 100ம், எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – ஜூன் 13, 2022

தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி எழுத்துத்தேர்வு மற்றும் சான்றதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொதுஅறிவு போன்ற பிரிவுகளிலிருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்தக் கூடுதல் விபரங்களை, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_12052022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...