Posts

Showing posts from August 7, 2016
சுந்தரனார் பல்கலை.யில் தாற்காலிக பணி: ஆகஸ்ட் 10 இல் நேர்முகத்தேர்வு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் 10- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் புள்ளியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புக்கு பாடங்களைக் கற்பிக்க பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் விதிகளின்படி கல்வித்தகுதி உள்ளவர்கள் தாற்காலிக உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். இதற்கான நேர்முகத் தேர்வு புதன்கிழமை (ஆக.10) அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக புள்ளியில் துறையில் வைத்து நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (2 புகைப்படம், 2 சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்கள்) பங்கேற்கலாம். தகவல் தொழில்நுட்பவியலில் முதுநிலை அறிவியல் பட்டம் அடிப்படைத் தகுதியாகவும், புள்ளியியல் மற்றும் புள்ளியியல் மென்பொருள் பயன்பாடு குறித்த
அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 300 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 87 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாக தோற்றுவித்த கல்லூரிகள் மற்றும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை தேவைப்படும் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய உயர்கல்வித்துறை முடிவு செய்தது. இதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 369 விரிவிரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் 300 விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை 3 வருட ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல்