29 January 2022

 TNPSC - குரூப் - 2, குரூப் - 4 தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு




 'குரூப் - 2, குரூப் - 4' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுக்கான, 'அப்ஜெக்டிவ்' என்ற கொள்குறி வகை தேர்வில், குரூப் -- 3, குரூப் -- 4, குரூப் - 7 பி, சிறை அலுவலர் மற்றும் சிறை உதவி அலுவலர் பதவிக்கான குரூப் - 8 ஆகிய தேர்வுகளுக்கு, மேம்படுத்தப்பட்ட பாட திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.


மேலும், குடிமை பணிகளுக்கான 'குரூப் - 2, 2 ஏ' முதல்நிலை தேர்வுக்கான, மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டமும் இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பாடத் திட்டத்தை பார்த்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 கல்லூரிகள் திறந்தாலும் 'ஆன்-லைனில்' தேர்வு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்


விழுப்புரம்:''தமிழகத்தில் கல்லுாரிகள் திறக்கப்பட்டாலும், தேர்வுகள் 'ஆன்லைன்' மூலமாகவே நடைபெறும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.


விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பிப்., 1ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். டிசம்பரில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள், பிப்., 1ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என, அறிவித்து இருந்தோம்.

கல்லுாரிகள் திறக்கப்படுவதால் இதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற எண்ணம் சிலருக்கு உதித்துள்ளது. செமஸ்டர் தேர்வு ஏற்கனவே அறிவித்தது போல், ஆன்லைனில் நடைபெறும். செய்முறை தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. இதில், மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம்.தேர்வுகள் இல்லாத நாளில் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும்.

குறிப்பாக, பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு துவங்கப்பட்டு நடைபெறும்.தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இருமொழி கொள்கையை பின்பற்றுவதில்,தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவது மொழியை தேர்வு செய்து விருப்ப பாடமாக படிக்கலாம்.பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கல்லுாரி கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும். தேர்வுகள் முறையாக நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 புதுச்சேரியில் கொரோனாவை தாக்கத்தை பொறுத்தே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!!


பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி – கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சிரித்துள்ளார்


புதுச்சேரி சிறையில் சமீபகாலமாக செல்போஃன் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகின்றது, இதனை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறை மற்றும் சிறைதுறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாகவும் நீண்ட நாட்களாக சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்கள் விடுதலை செய்வது குறித்தும் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் தலைமை செயலர், காவல் துறை மற்றும் சிறை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.


கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் முதலமைச்சர் உடன் கலந்து பேசி பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.


கொரோனா தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வி துறை அறிவிக்கும்.


அதே போல் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வி துரை இயக்குனர், செயலருடன் ஆலோசித்து தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் எனவும் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.


புதுச்சேரி சிறைச்சாலையை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், சிறையில் செல்போன் பயன்பாடு, கஞ்சா மற்றும் போதை பொருட்களின் புழக்கம் குறித்து புகார்கள் வந்த வன்னம் உள்ளது.


இது தொடர்பாக அரசு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் கூட இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறையில் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக ஜாமர் கருவிகள் செயல்பாட்டில் உள்ளதாக சிறை துறை தெரிவித்துள்ளது.


ஆனாலும் ஜாமர் கருவிகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் சிறைக்கு ஒரு குழு அமைத்து அரசு கண்காணிக்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சிறையில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் கைதிகளுடன் தொடர்பு வைக்கும் சிறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.



  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...